Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

02nd December 2017 00:15:49 Hours

இராணுவத் தளபதிய முல்லைத் தீவுப் பாதுகாப்புப் படைத் தலைமயகத்திற்கு விஜயம்

இராணுவத் தளபதியான லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க அவர்கள் தமது கடமைப் பொறுப்பை ஏற்றதன் பின்னர் முதன் முறையாக தமது உத்தியோக பூர்வ விஜயத்தை முல்லைத் தீவுப் பாதுகாப்புப் படைத் தலைமயகத்திற்கு கடந்த வெள்ளிக் கிழமை (01) மேற்கொண்டிருந்தார்.

இவ்வாறு வருகை தந்த இராணுவத் தளபதியவர்களுக்கு 14ஆவது மற்றும் 24ஆவது இலங்கை இராணுவச் சிங்கப் படையினரின் தலைமையில் இராணுவ அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டு முல்லைத் தீவுப் பாதுகாப்புப் படைத் தலைமயகத்தின் கட்டளைத் தளபதியான மேஜர் ஜெனரல் துஷ்யந்த ராஜகுரு அவர்களால் வரவேற்கப்பட்டார்.

மேலும் இராணுவத் தளபதியவர்களின் வருகையினை பிரதிபலிக்கும் முகமாக தளபதியவர்களால் மர நடுகை நடப்பட்டதுடன் இப் படைத் தலைமையக அதிகாரிகள் மற்றும் படையினருடனான குழுப் புகைப்படமும் எடுக்கப்பட்டது.

அதன் பிற்பாடு முல்லைத் தீவுப் பாதுகாப்புப் படைத் தலைமயக படையினருடன் உரையாற்றுகையில் படையினர் நாட்டிற்காக ஒழுக்கம் மற்றம் அற்பணிப்புடன் செயற்படுதலின் முக்கியத்துவம் பற்றி எடுத்துரைத்தார்.

அவைமட்டுமன்றி இப் பிரதேச பொது மக்களுடன் நல்லிணக்கத்தை மேம்படுத்தும் நோக்கில் பல திட்டங்களை மேற்கொள்வதின் அவசியம் பற்றியும் எடுத்துக் கூறினார்.

இதன் போது அனைத்து கட்டளைத் அதிகாரிகளும் படையினரும் இராணுவத் தளபதியவர்களின் உரையை செவிமடுக்கும் நோக்கில் கலந்து கொண்டனர்.

அதன் பின்னர் படையினருடனான தேநீர் விருந்துபசாரத்திலும் இராணுவத் தளபதியவர்கள் கலந்து கொண்டார்.

அத்துடன் இவரது வருகையின் பிற்பாடு முல்லைத் தீவு முன் அரங்குப் பராமரிப்பு வலய பாதுகாப்புப் படைத் தலைமையகத்திற்கு தமது விஜயத்தைத் தொடர்ந்ததுடன் இப் படைத் தலையைக கட்டளை அதிகாரியான பிரிகேடியர் சன்ன அட்டிபொல அவர்கள் இராணுவத் தளபதியவர்களை வரவேற்றார்.

அதன் பின்னர் இராணுவத் தளபதியவர்களால் அதிதிகள் புத்தகத்தில் கையொப்பமிடப்பட்டதுடன் தளபதியவர்களுக்கு முல்லைத் தீவுப் பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் கட்டளைத் தளபதியான மேஜர் ஜெனரல் துஷ்யந்த ராஜகுரு அவர்களால் ஞபாகார்த்த சின்னமும் வழங்கப்பட்டது.

latest Running Sneakers | Nike Air Max 270 - Deine Größe bis zu 70% günstiger