Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

30th November 2017 20:04:09 Hours

இராணுவ தளபதி கிளிநொச்சி படைத்தலைமையகத்துக்கு விஜயம்

கிளிநொச்சி பிரதேசத்தில் அமைந்துள்ள இராணுவ படைத்தலைமையகத்துக்கு (30) ஆம் திகதி காலை வியாழக்கிழமையன்று இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க முதல் முறையாக தனது விஜயத்தை மேற்கொண்டார்.

தலைமையகத்திற்கு வருகை தந்த இராணுவ தளபதியை இப் படைத் தளபதி மேஜர் ஜெனரல் அஜித் காரியகரவன அவரகளால் வரவேற்கப்பட்டார.

படைத்தலைமையகத்தின் 9ஆவது பொறியியளாலர் படையினரால் கௌரவப் பாதுகாப்புடன் இராணுவ அணிவகுப்பு மரியாதையும் வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து தளபதியினால் படைத்தலைமையக வளாகத்தை பார்வையிட்டதுடன் 66ஆவது படைப்பிரிவிற்கு விஜயத்தை மேற்கொண்டார்.

இப்படைத் தளபதியான மேஜர் ஜெனரல் அஜித் காரியகரவன அவரகள்,மற்றும் படைப்பிரிவின் கட்டளை அதிகாரிகள் மற்றும் சிரேஷ்ட அதிகாரிகளோடு படைத்தலைமையகம் தொடர்பான கலந்துரையாடலையும் பகிர்ந்து கொண்டார்.

அதன் பின்னர்,படைத்தலைமையக வளாகத்தில் ஓழுங்கு செய்யப்பட்ட நெலும் பியசா ஆடிட்டோரியத்தில் 150க்கும் அதிகமான அதிகாரிகளையும் 1200 இராணுவ வீரர்களையும்இராணுவ தளபதி அவர்கள் சந்தித்தார். இச்சந்தர்ப்பத்தில் இராணுவ தளபதிக்கு நினைவு பரிசு வழங்கி கௌரவிக்கப்பட்டது.

அதனை தொடர்ந்து இராணுவ தளபதி படையினர் மத்தியில் உரையை ஆற்றினார் அந்த உரையின் போது, பெருமை படைத்த உறுப்பினர்களாக அர்ப்பணிப்புடன் மற்றும் உட்சாகத்துடன் இராணுவத்தினர் தமது கடமைகளை நிறைவேற்ற வேண்டும்,இராணுவத்தினராகிய நாம் அனைத்து மட்டங்களிலும் தமது ஒத்துளைப்பை வழங்குதல், இனமத ஒற்றுமை,நல்லிணக்கம் ஆகியவற்றை ஊக்குவிப்பதற்கான உதவிகளை வழங்குவதன் முலம் பொதுமக்களிடம் சிறந்த உறவுகளைபெற்றுக்கொள்வதுஅவசியம் என்பதை சுட்டிக்காட்டினார்.

மேலும் 2018 ம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் நாட்டின் ரத்த ராகின ஜத்தி -ஸ்ரீலங்கா இராணுவம் என்ற பெயரில் ஒரு புதிய சகாப்தத்தில் நாட்டை முன்னெடுத்துச் செல்லுமாறு அமைக்கப்பட்டுள்ளது. எதிர்கால இராணுவம் நாட்டின் பாதுகாவலர்களாக எப்படி தொடர்ந்து இருக்க வேண்டும் என்பதை அவர் விளக்கினார். அதனை தொடர்ந்து இராணுவ தளபதியினால் தலைமையக வளாகத்தினுள் மர நடுகை நிகழ்வு இடம்பெற்றதுடன் படையினருடன் குழு புகைப்படத்திலும் இணைந்துகொண்டார்.

அதனையடுத்து, எலிபன்ட் பாஸ் கசலக காமினி வார் மெமரியல் வளாகத்திற்குள் சென்று புதிதாக அமைக்கப்பட்ட படையினர் தங்கும் விடுதியையும் திறந்து வைத்தார்.

பூநகரில் அமைந்துள்ள 66ஆவது படைப்பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரால் துமிந்த கெபித்திவலான அவர்களின் அழைப்பின்பேரில் வருகை தந்த இராணுவ தளபதியவர்கள் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட கட்டிடத்தையும் பார்வையிட்டார்.அதன் பின்னர் எல்லா படையினரிடமும் சில கருத்துகளையும் பாகிர்ந்துக் கொண்டார்.

அதனை தொடர்ந்து இராணுவ தளபதியினால் தலைமையக வளாகத்தினுள் மர நடுகை நிகழ்வு இடம்பெற்றதுடன் படையினருடன் குழு புகைப்படத்திலும் இணைந்துகொண்டார்.இறுதியில் இராணுவ தளபதி அவரின் வருகையையிட்டு படையணி தலைமையகத்தில் பிரமுகர்களின் வருகை புத்தகத்தில் இராணுவ தளபதி கையொப்பமிட்டார்.

இராணுவ தளபதியவர்கள் பாதுகாப்பு படைத் தலைமையக முல்லைத்தீவுக்கும் டிசம்பர் மாதம் (1-2) ஆம் திகதிகளில் தனது விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார்.

latest Nike Sneakers | Nike News