Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

02nd November 2017 22:06:19 Hours

ஜினசேன திட்டத்தின் மூலம் சுத்தமானகுடிநீர்வசதிகள்வழங்கிவைப்பு

கிளிநொச்சி 66ஆவது படைத்தலைமையகத்தின் கீழ் இயங்கும் அரசபுரம் இராணுவபயிற்றுவிப்பு பாடசாலைக்கான குடிநீர்சுத்திகரிப்பு தாங்கிகளை ஜினசேனநிறுவனத்தினர் வழங்கியுள்ளனர்.

அந்த வகையில் 66ஆவது படைத்தலைமையகத்தின் தளபதியான மேஜர் ஜெனரல் துமிந்த கெப்பிட்டிவலன அவர்களினால் விடுக்கப்பட்ட வேண்டுகோளிற்கிணங்க இந்நிறுவனத்தினரால் 5000லீற்றர் கொள்ளக்கூடிய மூன்று வடிகால் நீர்த்தாங்கிகள் மற்றும் நீர்க்குழாய்கள் போன்றன இலவசமாக வழங்கப்பட்டுள்ளன.

மேலும் இவ்வடிகால் தாங்கிகள் சுமார் 515,000ருபா பெறுமதியானதுடன் இந் நிறுவனத்தின் 7தொழில் நுட்பவியலாளர்களின் உதவியுடன் பொருத்தப்பட்டதுடன், இவை இப்பிரதேச பொதுமக்களிற்கும் ஓர் சிறந்த பயனுள்ள செயற்பாடாக காணப்படுவதுடன் இராணுவத்தினருக்கு தமதுநன்றிகளைஇப்பிரதேசவாசிகள்தெரிவித்துள்ளனர்.

கிளநொச்சி பாதுகாப்பு படைத்தலைமைய தளபதியான மேஜர் ஜெனரல் அஜித் காரியகரவன அவர்களின் ஆசீர்வாதத்துடன் கடந்த மாதம்செவ்வாய்க்கிழமை (24) இடம் பெற்ற இந் நிகழ்வில் இராணுவ அதிகாரிகள், மேஜர் ஜெனரல் துமிந்த கெப்பிட்டிவலன,ஜினசேன நிறுவனத்தின் பிரதி நிதியான திருதிஸ்ஸ ஜினசேன போன்ரோர் கலந்து கொண்டனர்.

கடந்த ஜீலை மாதம் இப் பிரதேசத்திற்கு வருகை தந்த இந் நிறுவனத்தினர் இவ் இராணுவ பாடசாலையினர் மற்றும் பிரதேசவாசிகள் சுத்தமான குடிநீரைப் பெறுவதற்கான இடர்பாடுகள் குறித்து கவனத்திற் கொண்டனர்.

இதன் நிமித்தம் இந் நிறுவனத்தினரின் ஆனுசரனையுடன் இக் குடிநீர்த்தாங்கிள் வழங்கப்பட்டது.

மேலும் இவ் இராணுவப் பயிற்றுவிப்பு பயிற்ச்சிகள் பாடசாலையானது கடந்த யுத்தகாலங்ளில் 2011ஆம்ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு இராணுவ அதிகாரிகள் மற்றும் படையினருக்கான பயிற்ச்சிகள் வழங்கப்பட்டதாககும்.

அத்துடன் இவ் இராணுவப் பயிற்றுவிப்பு பயிற்ச்சிகள் பாடசாலையில் இராணுவப் புலனாய்வு பயிற்ச்சிகள், தலைமைத்துவம் ,தியானப்பயிற்ச்சிகள் போன்ற பலவாறான இராணுவப்பயிற்ச்சிகள் மேற்கொள்ளப்படும் பயிற்ச்சிப் பாடசாலையாக காணப்படுகின்றது.

மேலும் இப் பயிற்ச்சிப் பாடசாலையில் கிட்டத்தட்ட 500ற்கும் மேற்பட்ட இராணுவப் படையினரை பயிற்றுவிக்கக்கூடிய வசதிகளைக் கொண்டதாகக் காணப்படுகின்றது.

buy shoes | Buy online Sneaker for Men