Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

06th October 2017 10:10:48 Hours

இராணுவ விளையாட்டு நிகழ்வுகள் முடிவுற்றன

இராணுவத்தின் 54ஆவது விளையாட்டுகளின் இறுதி நிகழ்வுகள் கடந்த வியாழக் கிழமை (05) முடிவிற்கு வந்தது.

அந்த வகையில் மாலை வேளை ஹோமாகமவில் உள்ள தியகம அரங்கில் இடம் பெற்ற இந் நிகழ்வில் இராணுவ விளையாட்டு சங்கத்தின் பணிப்பாளரான சுதந்த பெரேரா அவர்களது அழைப்பை ஏற்று இராணுவத் தளபதியான லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.

2017ஆம் ஆண்டிற்கான 54ஆவது முறையாக இடம் பெறும் இவ் இராணுவ விளையாட்டு நிகழ்வுகள் கடந்த செவ்வாய்க் கிழமை (03) காலை வேளை ஹோமாகமவில் உள்ள தியகம அரங்கில் 1500 இராணுவ விளையாட்டு வீரர்களின் பங்களிப்போடு அரங்கேறியது.

அவ்வாறு இடம் பெற்ற இந் நிகழ்வுகளில் ஆண்களுக்கான விளையாட்டுப் போட்டிகளில் இலங்கை இராணுவ மின்சார மற்றும் பொறியியல் படையணியைச் சேர்ந்த வீரர்கள் முதலாம் இடத்தைச் தட்டிச் சென்றதுடன் இலங்கை இராணுவ பீரங்கிப் படையணி இரண்டாம் இடத்தைப் பெற்றது.

பெண்களுக்கான விளையாட்டுப் போட்டிகளில் இலங்கை இராணுவ 6ஆவது மகளிர்ப் படையணியைச் சேர்ந்த வீராங்கனைகள் முதலாம் இடத்தைச் தட்டிச் சென்றதுடன் இலங்கை இராணுவ 2ஆவது (தொண்டர்) மகளிர்ப் படையணி இரண்டாம் இடத்தைப் பெற்றது.

இந் நிகழ்வின் இறுதியில் வெற்றியீட்டிய படையினருக்கான சின்னங்களையும் பரிசில்களையும் இராணுவத் தளபதியவர்கள் வழங்கினார்.

இந் நிகழ்விற்கு வருகை தந்த இராணுவத் தளபதியவர்களை இலங்கை இராணுவ விளையாட்டுக் சங்கத்தின் தலைவரான மேஜர் ஜெனரல் சுதத் பெரேரா அவர்கள் வரவேற்றார்.

Sportswear free shipping | Sneakers