Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

25th August 2017 17:49:36 Hours

இலேசாயுத காலாட்படையின் புதிய உள்ளக விளையாட்டு அரங்கம் திறந்து வைப்பு

இராணுவ இலேசாயுத காலாட் படையணியின் தளபதியான மேஜர் ஜெனரல் அமல் கருணா சேகர அவர்களின் அழைப்பிற்கமைய லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க அவர்களினால் இத் தலைமையகத்தில் புதிதாக அமைக்கப்பட்ட புதிய உள்ளக விளையாட்டு அரங்கம் வெள்ளிக் கிழமை (25) திறந்து வைக்கப்பட்டது.

அந்த வகையில் பனாகொடை இலேசாயுத காலாட் படைத் தலைமையகத்தில் இடம் பெற்ற இந் நிகழ்விற்கு வருகை தந்த இராணுவத் தளபதி உள்ளடங்களான உயர் அதிகாரிகளை இப் படையணியின் கட்டளை அதிகாரியான பிரிகேடியர் எம். எம். கித்சிரி அவர்கள் இராணுவ அணிவகுப்பு மரியாதையுடன் வரவேற்றார்.

அதனைத் தொடர்ந்து யுத்தத்தின் போது மரணித்த இப் படையணியைச் சேர்ந்த வீரர்களின் நினைவுத் துாபிக்கு இராணுவ தளபதி அஞ்சலியை செலுத்தினார்.

இந் நிகழ்வில் மங்கள விளக்கேற்றலுடன் உள்ளக விளையாட்டு அரங்கம் திறந்து வைக்கப்பட்டது. அதனைத் தொடந்து இவ் விளையாட்டரங்கில் இடம் பெற்ற கபடிப் போட்டியில் இப் படையணி மற்றும் கெமுனு படையணி கலந்துகொண்டுபோட்டிகள் இடம் பெற்றன. இப் போட்டியில் இலங்கை இலேசாயுத காலாட்படையணி வெற்றி பெற்றது.

இவ் விளையாட்டரங்கானது கிட்டத் தட்ட 1000 பேரின் பங்களிப்புடன விளையாட்டு போட்டிகள் நடாத்தக்கூடிய அரங்கமாக விளங்குகின்றது. மேலும் பட்மின்டன் ,உடற் கட்டமைப்பு கூடம்,ஸ்கோஸ்,கரப் பந்தாட்டம் மற்றும் கூடைப் பந்தாட்டம் போன்ற விளையாட்டுகளை மேற்கொள்ளக் கூடிய வகையிலும் இராணுவ விளையாட்டு அரங்குகளில் இது மிக பாரிய அளவில் நிர்மானிக்கப்பட்ட அரங்காக காணப்படுகின்றது.

இந் நிகழ்வில் 125 இராணுவ அதிகாரிகளும் 1500 இராணுவ வீரர்களும் இப் படையணியைச் சேர்ந்த இராணுவ உயர் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

Running sports | Jordan Shoes Sale UK