Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

25th August 2017 08:56:28 Hours

2017 ஆம் ஆண்டிற்கான கூட்டுப் படை பயிற்சி அப்பியாச நடவடிக்கை VIII வது தடவை ஆரம்பம்

வெளிநாட்டு இராணுவ அங்கத்தவர்கள் மற்றும் கண்காணிப்பாளர்கள் 62பேர் உட்பட முப்படையினர் 2675 பேருடன் இராணுவ தினக்குறியீட்டுடன் முக்கிய புலம் பயிற்சி இராணுவ அப்பியாச ‘2017ஆம் ஆண்டிற்கான கூட்டுப் படை பயிற்சி அப்பியாசம்’ 2017ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 3ஆம் திகதி நடாத்துவதற்கு அனைத்து ஒழுங்குகளும் செய்யப்பட்டுள்ளதாக இன்றைய தினம் (24)ஆம் திகதி மாலை இராணுவ தலைமையகத்தில் இடம்பெற்ற ஊடக கலந்துரையாடலின் போது இராணுவ பாதுகாப்பு பதவி நிலை பிரதானி மேஜர் ஜெனரல் அமல் கருணாசேகர தெரிவித்தார்.

இராணுவ பதவி நிலை பிரதானியின் தலைமையில் இடம்பெற்ற இந்த ஊடக கலந்துரையாடலில் இராணுவ கூட்டுப் படை அப்பியாச பணிப்பாளர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர,இராணுவ பயிற்சி பணிப்பாளர் மேஜர் ஜெனரல் விஜித ரவிபிரிய,இராணுவ ஊடக பணிப்பாளர் ரொஷான் செனெவிரத்ன ,கொமாண்டோ படைத் தலைமையகத்தின் பிரிகேடியர் உதித பண்டார ,விஷேட படைத் தலைமையகத்தின் பிரிகேடியர் சுஜீவ செனரத்யாபா,கூட்டுப் படையின் கடற்படை கட்டளை அதிகாரி கொமதோரு யூ.ஐ சேரசிங்க மற்றும் விமானப்படையின் கட்டளை அதிகாரியாக விங்கொமாண்டர் எம்.ஏ.டீ.எம்.சி மனதுங்க கலந்து கொண்டனர்.

2010ஆம் ஆண்டு இராணுவத்தினர் அறிமுகம் செய்யப்பட்ட இந்த பயிற்சி நடவடிக்கையின் நோக்கம் என்னவென்றால் 2009ஆம் ஆண்டு இடம்பெற்ற மனிதாபிமான நடவடிக்கையின் போது இலங்கை இராணுவம் பெற்றுக் கொண்ட அனுபவத்தை பகிர்ந்து கொள்ளும் நோக்கத்துடனும் சகோதரத்துவ சேவையை அன்னிய ஒன்னிய படுத்தும் நோக்கத்துடனும் இந்த கூட்டுப் படைப் பயிற்சிகள் ஓழுங்கு செய்யப்பட்டுள்ளதாக மேஜர் ஜெனரல் அமல் கருணாசேகர மேலும் தெரிவித்தார்.

இராணுவ கூட்டுப் படை அப்பியாச பணிப்பாளர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர ஊடக கலந்துரையாடலின் உறையாற்றும் போது கூட்டு நடவடிக்கை அப்பியாச இம்முறை அனுமான காலகட்டம் தொடர்பாக அனுபவம் அற்ற கனிஷ்ட அதிகாரிகளது தீர்மானம் எடுக்கும் திறமையை மேம்படுத்துவதற்கான முயற்சியை வெளிக்காட்டும் முறை, அரச சார்பற்ற அமைப்பாளர்களின் செயற்பாட்டு திறமை, விமான மற்றும் கடற்படை நடவடிக்கை,சயிபர் தாக்குதல் மற்றும் சவால்,எச்சரிக்கை போன்றவை தொடர்பாக இந்த கூட்டுப் பயிற்சியில் உள்ளடக்கப்பட்டுள்ளது.

மேலும் இவர் தெரிவிக்கையில் கூட்டுப் படைப் பயிற்சி கால வரையான எல்லைகள் தொடர்பான விளக்கம் மற்றும் 2017ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் திருக்கோணமலையில் இராணுவ 24 நடவடிக்கை அப்பியாத்தில் கலந்து கொண்டவர்களுக்கு நான்றிதலும் வழங்கப்படும்.

கடற்படை தரை நடவடிக்கை பணிப்பாளர் ,கொமதோரு யூ.ஐ. சேரசிங்க இராணுவத்திற்கு நன்றியை தெரிவிக்கும் முகமாக தாக்குதல் படகுகளின் மூலம் இராணுவ விஷேட படையணியின் அனைத்து படை வீரர்கள்,டோரா இனத்தைச் சேர்ந்த படகுகளின் கண்காணிப்பு பணிகளில் கடற்படை லென்டீன் படகுகள் மற்றும் தாக்குதல் படகுகளின் இந்த கூட்டுப் பயிற்சிகள் இடம்பெறும்.

விமானப் படை சார்பாக கலந்து கொண்ட கட்டளை அதிகாரியான விங்கொமாண்டர் மனதுங்கதெரிவிக்கையில் விமான நடவடிக்கைகள் தொடர்பான அனைத்து வசதிகளும் இந்த பயிற்சிக்கு விமானப்படையினரால் வழங்கப்படும். இந்த கூட்டுப் பயிற்சிகள் இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக அவர்களின் ஆலோசனைக்கமைய இவை இடம்பெறுகின்றது.

இலங்கை இராணுவத்தினால் எட்டாவது தடவையாக ஒழுங்கு செய்யப்பட்ட ‘ 2017 ஆம் ஆண்டிற்கான கூட்டுப்படை அப்பியாச பயிற்சி’ இராணுவம், கடற்படை மற்றும் விமானப்படை வீரர்கள் 2675 பேரின் பங்களிப்புடனும், வெளிநாட்டைச் சேர்ந்த இராணுவ வீரர்கள் 62 பேரின் பங்களிப்புடன் கிழக்கு பிராந்தியத்தை உள்ளடக்கி இந்த பயிற்சிகளை மேற்கொள்ளுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளன. இந்த கூட்டுப் படை அப்பியாச பயிற்சி மின்னேரியாவில் அமைந்துள்ள நடவடிக்கை தலைமையகத்தில் இருந்து செப்டம்பர் மாதம் 03ஆம் திகதி தொடக்கம் 24ஆம் திகதி வரை நடாத்துவதற்கு ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளன.

இந்த அப்பியாச விஷேட நடவடிக்கையில் இராணுவ தந்திர உபாயங்களை உபயோகித்து கொமாண்டோ,விஷேட படையணி மற்றும் பொறிமுறை காலாட்படை அணியினர் உட்பட 2108 பேரும், 370 கடற்படையினரும், 197 விமானப்படை வீரர்களும் பங்களாதேஷ், இந்தியா, மாலதீவு, நேபாளம், பாகிஸ்தான், இந்தோனிசியா, மலேசியா, சீனா, ரசியா, அமெரிக்கா, பிரேசில், சூடான், ஈராக், இஷ்ராயில், ஓமான், துருக்கி, ஈரான் மற்றும் கென்யா போன்ற நாடுகளிலிருந்து வெளிநாட்டு இராணுவத்தினரும் இந்த கூட்டுப் பயிற்சியில் கலந்து கொள்ளவுள்ளனர். இந்த பயிற்சிக்கு கட்டளை தளபதியாக மேஜர் ஜெனரல் அருண ஜயசேகரவும்,பிரதி பணிப்பாளராக பிரிகேடியர் நிஷாந்த ஹேரத்தும், பிரிகேடியர் சுஜீவ செனரத் யாபா, பிரிகேடியர் உதித பண்டார, கேர்ணல் சந்திரா ஜயவீர, கேர்ணல் சுஜீவ ஹெட்டியாரச்சி மற்றும் கேர்ணல் சந்தன விக்கிரமசிங்க போன்ற சிரேஷ்ட அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்த விஷேட நடவடிக்கை இராணுவ அப்பியாசம் செப்டம்பர் மாதம் 24ஆம் திகதி முடிவடையவுள்ளது. அதற்கு முன்மாதிரியான முன் தினம் இராணுவம்,கடற்படை,விமானப்படை கூட்டாக இணைந்து நடாத்தும் பயிற்சி நடவடிக்கையாகும்.

இராணுவ கூட்டுப்படை அப்பியாச பயிற்சி இவ் வருடம் இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக அவர்களது கண்காணிப்பின் கீழ் இடம்பெறும்.

இலங்கை படையினர்கள் 2009ஆம் ஆண்டு முடிவுக்கு கொண்ட வந்த மனிதாபிமான நடவடிக்கையில் இந்த விஷேட கூட்டுப்படை நடவடிக்கை பயிற்சி அப்பியாசம் இடம்பெற்றது. வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகம்,கிழக்கு மற்றும் முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் ஒத்துழைப்புடன் மட்டக்களப்பு,வாகரை, திருக்கோணமலை வடக்கு, தொப்பிகலை பிரதேசங்கள் உள்ளடக்கப்பட்டு இடம்பெறும். இந்த அப்பியாசத்தில் கடற்படை மற்றும் விமான நடவடிக்கைகள் இடம்பெறும். இலங்கை இராணுவத்தில் விஷேட திறமை மற்றும் அனைத்து மட்டங்களில் போராட்ட ஒழுங்கு மற்றும் ஒழுங்கமைப்பு முறை மேற்கொள்ளும் நோக்கத்துடன் கடற்படையின் ஒத்துழைப்புடன் பொறிமுறை காலாட் படையினரது பங்களிப்புடன் இந்த நடவடிக்கைகள் இடம்பெறும்.

இந்த கூட்டுப் பயிற்சி இறுதி கட்டத்தில் இராணுவ படையினருடன் கூட்டாக கடற்படை மற்றும் விமானப்படையினர் இணைந்து எதிரியின் கோட்டைக்கு நேரடி தாக்குதல் புரியும் கண்காட்சியை முன் வைக்க எதிர்பார்த்துள்ளோம். இராணுவத்தினால் ஆரம்பிக்கப்பட்ட இந்த களப் பயிற்சி அப்பியாசம் இலங்கை கடற்படை மற்றும் விமானப்படையினரின் பங்களிப்புடன் இடம்பெறும். விஷேட இராணுவ போர் தந்திர உபாய திட்ட நடவடிக்கை மற்றும் கட்டளையின் பிரகாரம் எந்த காலக் கட்டத்திலும் படையினர் ஒரு குழுக்களாக கூட்டு நடவடிக்கை பயிற்சியை மேற்கொள்ளும் நோக்கத்துடனும் சயிபர் தாக்குதல் தொடர்பாகவும் இந்த அப்பியாச பயிற்சிகளை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த பயிற்சிகளில் கூடுதலாக திட்டமிடல், முன் தகுதி, தொழில்நுட்ப பயன்பாடு, ஒருங்கிணைப்பு, கட்டளை கட்டுப்பாட்டு தந்திரோபாயங்களை செயல்படுத்தல் ஆகியவற்றில் பரவலாக கவனம் செலுத்தப்படுகின்றது.

உலகத்தின் கொடிய பயங்கரவாதத்தை ஒழித்து இலங்கையினுள் மீண்டும் சீரான நிலையை உருவாக்கி இனத்தின் பாதுகாப்புக்கு பாதுகாப்பாளியான இலங்கை இராணுவத்திற்கு இந்த கூட்டுப்படை போர் அப்பியாச பயிற்சி இராணுவ தளபதியின் ஆலோசனைக்கமைய கடல் நடவடிக்கையின் கட்டளையை கொமதோரு எதிரிசிங்கவும் விமான நடவடிக்கை கட்டளையை குறுப் கெப்டன் வீ.ஐ சேரசிங்கவும் இந்த கூட்டுப் பயிற்சியில் வழங்குவதற்கு இணைந்துள்ளனர்.

ஒரு கற்பனையான சூழ்நிலையின் அடிப்படையில் மற்றும் பயிற்சி நோக்கங்களை அடைவது மீது அவதானத்தை செலுத்தி இந்த வருடத்தில் கூட்டுப்படை அப்பியாச பயிற்சி உடனடி தாக்குதல்,பயணக் கைதிகளை மீட்டல் கடற்படை மற்றும் விமானப்படை கூட்டுப் பயிற்சி தேடல் மற்றும் கண்காணிப்புநடவடிக்கையில் மற்றைய படையணியினது ஒத்துழைப்புடன் இந்த பயிற்சிகள் இடம்பெறும்.

இந்த கூட்டுப் பயிற்சியில் வெளிநாடு பிரதிநிதிகள் கூடுதலானோர்களின் உள்ளங்களை கவரக் கூடிய வருடமாக இந்த வருடம் அமைகின்றது. இறுதி பயிற்சி செப்டம்பர் மாதம் 23ஆம் திகதி திருக்கோணமலையில் இடம்பெறும். அதனை தொடர்ந்து 24ஆம் திகதி இந்த கூட்டுப் பயிற்சி நிறைவடையும்.

latest jordan Sneakers | NIKE