Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

16th May 2024 21:55:30 Hours

ஓய்வுபெரும் மேஜர் ஜெனரலின் சேவைக்கு இராணுவத் தளபதி பாராட்டு

இலங்கை இராணுவத் தொண்டர் படையணியின் தளபதியும், இலங்கைப் பொறியியல் படையணியின் படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் எம்கே ஜயவர்தன ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யூஎஸ்பீ என்டியூ அவர்கள் இலங்கை இராணுவத்தில் 35 வருட பணிக்குப் பின், ஓய்வு பெறுவதற்கு முன்னர் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்களை 16 மே 2024 அன்று அவரது குடும்ப உறுப்பினர்களுடன் இராணுவத் தளபதி அலுவலகத்தில் சந்தித்தார்.

சந்திப்பின் போது, இராணுவத் தளபதி அவரது பணிக்காலம் முழுவதும் பல்வேறு சவாலான பாத்திரங்களில் அவரது அசைக்க முடியாத அர்ப்பணிப்பு மற்றும் சவால்கள் நிறைந்த பொறுப்புகளுக்கு சிரேஷ்ட அதிகாரியைப் பாராட்டினார். பயங்கரவாதத்திற்கு எதிரான போரின் போது சிரேஷ்ட அதிகாரியின் விலைமதிப்பற்ற பங்களிப்புகள் மற்றும் போருக்குப் பிந்தைய காலத்தில் அவர் தொடர்ந்து கடமையாற்றியதை இராணுவத் தளபதி குறிப்பாக எடுத்துரைத்தார்.

பதிலுக்கு, மேஜர் ஜெனரல் எம்கே ஜயவர்தன ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யூஎஸ்பீ என்டியூ அவர்கள் இராணுவத் தளபதி தனக்கு வழங்கிய உறுதியான வழிகாட்டுதல் மற்றும் நன்றியைத் தெரிவித்தார். மேலும் இராணுவத் தளபதி ஓய்வுபெறும் அதிகாரியின் குடும்பம் ஆற்றிய முக்கிய பங்கையும் பாராட்டியதுடன் ஓய்வுபெறும் சிரேஷ்ட அதிகாரிக்கு பாராட்டுச் சின்னமும் அவரது குடும்ப உறுப்பினர்களுக்குப் விசேட பரிசுகளையும் வழங்கினார்.

ஓய்வுபெறும் சிரேஷ்ட அதிகாரியின் சுருக்கமான விபரம் பின்வருமாறு;

மேஜர் ஜெனரல் எம்கே ஜயவர்தன ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யூஎஸ்பீ என்டியூ அவர்கள், 1988 ஜூலை 26 அன்று, இலங்கை இராணுவத்தின் பாடநெறி 30 இல் இலங்கை இராணுவத்தின் நிரந்தர படையணியில் பயிலிளவல் அதிகாரியாக இணைந்தார். பாகிஸ்தான் இராணுவ கல்வியற் கல்லூரி மற்றும் தியத்தலாவ இலங்கை இராணுவ கல்வியற் கல்லூரி ஆகியவற்றில் இராணுவப் பயிற்சியை வெற்றிகரமாக முடித்த பின்னர், இலங்கை பொறியியல் படையணியில் 09 ஜூன் 1990 அன்று இரண்டாம் லெப்டினன்னாக நியமிக்கப்பட்டார். இராணுவத்தில் பணிபுரியும் காலப்பகுதியில் தொடர்ந்து நிலை உயர்த்தப்பட்ட அவர், 2021 மே 07 மேஜர் ஜெனரல் நிலைக்கு நிலை உயர்த்தப்பட்டார். சிரேஷ்ட அதிகாரி 55 வயதில் 25 மே 2024 முதல் இலங்கை இராணுவத்தின் நிரந்தர படையணியிலிருந்து ஓய்வு பெறுகின்றார். அவர் ஓய்வுபெறும் போது, இலங்கை இராணுவத் தொண்டர் படையணியின் தளபதியும், இலங்கைப் பொறியியல் படையணியின் படைத் தளபதியாகவும் நியமனம் வகிக்கின்றார்.

அவர் தனது பணிக்காலத்தில், 6 வது களப் இலங்கைப் பொறியியல் படையணியின் படை கட்டளையாளர், இராணுவப் பயிற்சிப் பாடசாலையின் நிறைவேற்று அதிகாரி, 6 வது களப் இலங்கைப் பொறியியல் படையணியின் புலனாய்வு அதிகாரி, 5 வது களப் இலங்கைப் பொறியியல் படையணியின் 51 வது மற்றும் 53 வது குழுவின் அதிகாரி கட்டளை , இலங்கைப் பொறியியல் படையணியின் 2வது (வழங்கல்) படையணியின் பணி நிலை அதிகாரி, 9 வது களப் பொறியியல் படையணியின் தலைமையக குழுவின் கட்டளை அதிகாரி, 5வது களப் பொறியியல் படையணியின் இரண்டாம் கட்டளை அதிகாரி, யாழ் பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் பதில் பொதுப் பணி நிலை அதிகாரி 1 (ஒருங்கிணைப்பு), 6 வது களப் பொறியியல் படையணியின் கட்டளை அதிகாரி, இராணுவத் தலைமையக பொது பணி கிளையின் பொதுப் பணிநிலை அதிகாரி 1, 58 வது காலாட் படைப்பிரிவு தலைமையகத்தின் கேணல் பொது பணி, 581 வது காலாட் பிரிகேட்டின் உத்தியோகபூர்வ பிரிகேட் தளபதி, 612 மற்றும் 141 வது காலாட் பிரிகேட்டின் பிரிகேட் தளபதி, சிறிசர பிவிசும திட்டத்தின் பணிப்பாளர், திட்டப் பொறியியல் பிரிகேட்டின் தளபதி, கிளிநொச்சி முன்னரங்க பராமரிப்புப் பிரிவின் தளபதி, 55 வது காலாட் படைப் பிரிவின் தளபதி, பொறியியல் படைப் பிரிவின் தளபதி, இராணுவத் தலைமையகத்தின் தலைமைப் பொறியியலாளர், இலங்கை இராணுவ மகளிர் படையணியின் படைத் தளபதி, இலங்கைப் பொறியியல் படையணியின் படைத் தளபதி, முல்லைத்தீவு பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி, மற்றும் இலங்கை இராணுவத் தொண்டர் படையணியின் தளபதி போன்ற பல்வேறு நியமனங்களை வகித்துள்ளார்.

அவரது சிறப்பான சேவைக்கு அவருக்கு ரண சூர பதக்கம், விசிஷ்ட சேவா விபூஷணய மற்றும் உத்தம சேவா பதக்கம் ஆகிய விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.

குழு தளபதி தந்திரோபாயப் பாடநெறி, களப் பொறியியல் அடிப்படைப் பாடநெறி, இயந்திர இயக்குனர் மற்றும் பொருத்தல் பாடநெறி, அதிகாரிகளின் விசேட பாடநெறி, அதிகாரிகளின் செயல்பாட்டுப் பணியாளர்கள் பணிப் பட்ட படிப்பு, உளவியல் செயல்பாடுகள், கணணி பாடநெறி, காலாட் படை படையலகு பயிற்சி பாடநெறி, லே ஆலோசகர் பாடநெறி, இராணுவ புவியியல் பாடநெறி, சுரங்க நடவடிக்கை முகாமைத்துவ பாடநெறி, மனிதாபிமான சுரங்க நடவடிக்கை அடிப்படை முகாமைத்துவ பாடநெறி, மனிதாபிமான கண்ணிவெடி அகற்றும் பாடநெறி, பாதுகாப்பு இணைப்பாளர் திசைமுகப்படுத்தல் பாடநெறி, அதிகாரி பயிலிளவல் பயிற்சி - பாகிஸ்தான், இளம் அதிகாரிகளின் அடிப்படை பட்டபடிப்பு (பொறியியில்) - பாக்கிஸ்தான், பொறியியல் அதிகாரிகள் கல நகர்வு இயந்திர பட்டறை மற்றும் கட்டுமான இயந்திர பாடநெறி - இந்தியா, பெம்ல் தயாரிப்புகள் குறித்த சேவை பயிற்சி கற்கை - இந்தியா, சிரேஷ்ட கட்டளை பாடநெறி - இந்தியா, மனிதாபிமான சுரங்க நடவடிக்கை மற்றும் இராணுவ பாடநெறி- சுவிட்சர்லாந்து, பாதுகாப்பு மற்றும் மூலோபாய ஆய்வுகள் பாடநெறி – சீனா உள்ளிட்ட பல உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுப் கற்கைகளை தனது இராணுவ வாழ்க்கையில் பயின்றுள்ளார்.

சிரேஷ்ட அதிகாரி, சீனாவின் தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழகத்தில் பாதுகாப்பு மற்றும் உத்திசார் ஆய்வுகளில் முதுமானி, இந்தியாவின் தேவி அஹில்யா விஸ்வவித்யாலயாவில் சிரேஷ்ட நிலை பாதுகாப்பு முகாண்மை கற்கை, திறன் மேம்பாட்டு நிதி நிறுவனத்தின் ஆங்கில டிப்ளோமா போன்ற பல இராணுவம் அல்லாத உயர் கல்விகளையும் கற்றுள்ளார்.