Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

09th May 2024 05:38:19 Hours

கண்டி இராணுவத் தள வைத்தியசாலைக்கு இராணுவ பதவி நிலைப் பிரதானி விஜயம்

இலங்கை இராணுவ பதவி நிலை பிரதானி மேஜர் ஜெனரல் டபிள்யூஎச்கேஎஸ் பீரிஸ் ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யூஎஸ்பீ என்டியூ அவர்கள் 07 மே 2024 அன்று கண்டி இராணுவத் தள வைத்தியசாலைக்கு மருத்துவமனையின் சம்பிரதாய திறப்பு விழாவிற்கு முன்னதாக ஆய்வு விஜயம் மேற்கொண்டார்.

வருகைத் தந்த பதவி நிலைப் பிரதானியை இராணுவ சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் பீஎசீ பெர்னாண்டோ யூஎஸ்பீ மற்றும் கண்டி இராணுவத் தள வைத்தியசாலையின் கட்டளை அதிகாரி ஆகியோர் பிரதான நுழைவாயிலில் வரவேற்றனர்.

வைத்தியசாலையின் தற்போதைய செயற்பாடுகள், நிர்வாகம் மற்றும் வழங்கல் தேவைகள் பற்றிய விரிவான விளக்கமொன்றை கண்டி இராணுவத் தள வைத்தியசாலையின் முகாமைத்துவ மற்றும் பராமரிப்புப் பணிப்பாளர் பிரிகேடியர் டபிள்யூடபிள்யூஎம்பீடபிள்யூடபிள்யூபிஆர் பாலமகும்புர ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ வழங்கினார்.

இந்த விஜயமானது மருத்துவமனையின் விடுதிகள், சத்திர சிகிச்சைக் கூடங்கள், பல் மருத்துவ வசதிகள், சமையலறை மற்றும் சிப்பாய்களுக்கான தங்குமிடம், அத்துடன் சுற்றியுள்ள முகாம் வளாகங்கள், வசதியின் செயல்பாடுகள் பற்றிய விரிவான கண்ணோட்டத்தை உறுதிசெய்தது.

மத்திய பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் எஸ்ஆர்பி அலுவிஹாரே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சீ, சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.