Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

06th May 2024 21:40:12 Hours

பாகிஸ்தான் தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழக தூதுக்குழுவினால் இராணுவத் தளபதிக்கு பாராட்டு

பாகிஸ்தான் தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் சிரேஷ்ட அதிகாரிகள் குழு அவர்களின் பாடத்திட்டத்தின் ஒரு பகுதியாக இலங்கைகான ஆறு நாட்கள் கொண்ட சுற்றுப்பயணத்தில் திங்கட்கிழமை (மே 06) இராணுவத் தலைமையகத்திற்கு விஜயம் மேற்கொண்டது.

எயார் கொமடோர் பைசல் முஹம்மத் கான் தலைமையிலான 15 பேர் கொண்ட தூதுக்குழு, இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்களின் அலுவலகத்திற்கு அழைத்துச் செல்லப்படுவதற்கு முன்னர், இராணுவத் தலைமையக பயிற்சிப் பணிப்பகத்தின் பதில் பணிப்பாளர் கேணல் எம்.டி.ஐ குணவர்தன ஆர்எஸ்பீ பீஎஸ்சீ அவர்களினால் இராணுவத் தலைமையக நுழைவாயிலில் மரியாதையுடன் வரவேற்கப்பட்டது.

அதன் பின்னர், தூதுக்குழுவின் தலைவர் ஏயார் கொமடோர் பைசல் முஹம்மத் கான், கல்வி பீட உறுப்பினர் பிரிகேடியர் வக்காஸ் அலி கான், கொமடோர் முஹம்மது காஷிப் பர்ஹான், இராணுவ பாடநெறி பங்கேற்பாளர் மற்றும் இலங்கைக்கான பாகிஸ்தான் மற்றும் மாலைதீவு உயர்ஸ்தானிகராலயத்தின் பாதுகாப்பு ஆலோசகர் கேணல் முஹம்மது பாரூக் பீஎஸ்சீ ஆகியோர் இராணுவ தளபதியை சந்தித்து சுமுகமான கலந்துரையாடலில் ஈடுப்பட்டனர்.

கலந்துரையாடலின் போது, லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே அவர்கள் பல ஆண்டுகளாக இலங்கை மற்றும் பாகிஸ்தான் ஆயுதப்படைகளுக்கு இடையே நிலவும் ஒத்துழைப்பை நன்றியுடன் அங்கீகரித்ததோடு, பணி உறவுகளின் பிணைப்பு, புரிந்துணர்வு மற்றும் பயிற்சித் பாடநெறிகளின் பரிமாற்றம் ஆகியவற்றை மேலும் வளர்க்க வேண்டியதன் அவசியத்தையும் சுட்டிக் காட்டினார்.

மேலும், இராணுவத் தளபதி, இலங்கை இராணுவ வீரர்களுக்கு பயிற்சியளிப்பதில் வழங்கப்பட்ட உதவிகள் தொடர்பில் கருத்து தெரிவித்தார். இந்த ஆதரவு இலங்கை இராணுவ அதிகாரிகள் மற்றும் சிப்பாய்களின் திறமைகளை மேம்படுத்துவதிலும், அதன் மூலம் இராணுவ நிபுணத்துவ கலாசாரத்தை வளர்ப்பதிலும் முக்கிய பங்கு வகித்துள்ளது. மேலும், இலங்கை இராணுவத்தை மீள் ஒழுங்கமைக்கும் திட்டத்திற்கு அதிகமான ஆதரவை வழங்கியுள்ளது. அதிக பன்முகத்தன்மை மற்றும் திறமையை நோக்கி இட்டுச் செல்லும் பாகிஸ்தான் வழங்கிய தாராளமான பங்களிப்புக்கு இராணுவத் தளபதி நன்றி தெரிவித்தார்.

இறுதியில் இரு தரப்பினருக்கும் இடையே நல்லெண்ணத்தின் அடையாளமாக நினைவுச் சின்னங்கள் பரிமாறிக் கொள்ளப்பட்டன.