Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

01st May 2024 21:41:51 Hours

இராணுவத் தளபதி ஓய்வுபெறும் ஒழுக்க பணிப்பக பணிப்பாளர் நாயகத்திற்கு பாராட்டு

ஒழுக்க பணிப்பகத்தின் பணிப்பாளர் நாயகமும் இலங்கை பொலிஸ் படையணியின் படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் எசீஎ டி சொய்சா அவர்கள் 35 வருட சேவையின் பின்னர் இராணுவத்தில் இருந்து ஓய்வு பெறுவதற்கு முன்னர் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்களை 30 ஏப்ரல் 2024 அன்று அவரது குடும்ப உறுப்பினர்களுடன் சந்தித்தார்.

இந்த சந்திப்பின் போது, இராணுவத் தளபதி ஓய்வுபெறும் சிரேஷ்ட அதிகாரியின் அர்ப்பணிப்பான சேவை மற்றும் பல்வேறு சவால்கள் நிறைந்த பொறுப்புகளை தவறாது அர்ப்பணிப்புடன் செய்தமைக்கு தனது பாராட்டினை தெரிவித்தார். பயங்கரவாதத்திற்கு எதிரான போரின் போது சிரேஷ்ட அதிகாரியின் விலைமதிப்பற்ற பங்களிப்பையும், போருக்குப் பிந்தைய காலத்தில், குறிப்பாக ஒழுக்க அதிகாரியாக அவர் தொடர்ந்து கடமையாற்றியதையும் இராணுவத் தளபதி குறிப்பாக எடுத்துரைத்தார்.

பதிலுக்கு, மேஜர் ஜெனரல் எசீஎ டி சொய்சா அவர்கள் இராணுவத் தளபதியிடமிருந்து தனக்குக் கிடைத்த வழிகாட்டுதல் மற்றும் ஆதரவுக்கு நன்றி தெரிவித்தார். அவரது குடும்பம் ஆற்றிய முக்கிய பங்கை அங்கீகரித்து, அவரது சேவையின் போது செய்த தியாகங்களை தளபதி பாராட்டினார். கலந்துரையாடலின் முடிவில், இராணுவத் தளபதி ஓய்வுபெறும் சிரேஷ்ட அதிகாரிக்கு பாராட்டுச் சின்னமும் அவரது குடும்ப உறுப்பினர்களுக்குப் விசேட பரிசுகளையும் வழங்கினார்.

ஓய்வுபெறும் சிரேஸ்ட அதிகாரியின் சுருக்கமான விவரம் இங்கே:

மேஜர் ஜெனரல் எசீஎ டி சொய்சா அவர்கள், 1989 ஜனவரி 20 ம் திகதி இலங்கை இராணுவத்தின் நிரந்தர பாடநெறி இல - 32, இன் பயிலிளவல் அதிகாரி இணைந்துக் கொண்டார். தியத்தலாவ இலங்கை இராணுவ கல்வியற் கல்லூரியில் இராணுவப் பயிற்சியை வெற்றிகரமாக முடித்ததன் பின்னர், இரண்டாம் லெப்டினன் நிலையில் 19 ஜனவரி 1991 இல் இலங்கை இராணுவப் பொலிஸில் படையணியில் பணியமர்த்தப்பட்டார். இராணுவத்தில் பணிபுரிந்த காலத்தில் அடுத்தடுத்த நிலைகளுக்கு படிப்படியாக உயர்த்தப்பட்ட பின்னர், அவர் 2023 பெப்ரவரி 04 அன்று மேஜர் ஜெனரல் நிலைக்கு உயர்த்தப்பட்டார். சிரேஸ்ட அதிகாரி 55 வயதில் 02 மே 2024 முதல் இலங்கை இராணுவத்தின் ஒழுக்க பணிப்பகத்தின் பணிப்பாளர் நாயகமாகவும் இலங்கை இராணுவப் பொலிஸ் படையணியின் படைத் தளபதியாகவும் கடமையாற்றி ஓய்வு பெறுகின்றார்.

3 வது இலங்கை இராணுவ பொலிஸ் படையணியின் ஒழுக்க அதிகாரி, முதலாவது விஜயபாகு காலாட் படையணி, 7 வது இலங்கை சிங்கப் படையணி, இலங்கை இராணுவப் பொலிஸ் படையணியின் பயிற்சிப் பிரிவு மற்றும் விஷேட படை 1 அகியவற்றின் அணித் தலைவர், 2 வது ஒழுக்க நிறுவனம், 2 இலங்கை இராணுவப் பொலிஸ் படையணியின், 1 வது ஒழுக்க நிறுவனம், 2 வது இலங்கை இராணுவ பொலிஸ் படையணி, நிர்வாக நிறுவனம், 3 வது இலங்கை இராணுவப் பொலிஸ் படையணி அகியவற்றின் அதிகாரி கட்டளை, களப்பணியாளர் நிறுவனம், 1வது இலங்கை இராணுவப் பொலிஸ் படையணியின் சிறப்புப் விசாரணைப் பிரிவு, இலங்கை இராணுவ பொலிஸ் படையணியின் 1 வது ஒழுக்க நிறுவனம், 2வது இலங்கை இராணுவ பொலிஸ் படையணி, 1வது இலங்கை இராணுவப் பொலிஸ் படையணியின் களப் பொறுப்பாளர், 2 வது இராணுவப் பொலிஸ் படையணியின் தலைமை ஒழுக்க அதிகாரி, 3வது இராணுவப் பொலிஸ் படையணியின் நிறைவேற்று அதிகாரி மற்றும் இராணுவப் பொலிஸ் பாடசாலையின் பிரதான பயிற்றுவிப்பாளர் ஆகிய பல்வேறு நியமனங்களை அவர் தனது பணிக்காலத்தில் வகித்துள்ளார்.

அவர் 1 வது மற்றும் 4 வது இராணுவப் பொலிஸ் படையணியின் இரண்டாம் கட்டளைத் அதிகாரி, ஹைட்டி ஐக்கிய நாடுகளின் ஸ்திரப்படுத்தல் பணியின் இலங்கை படையலகின் கட்டளை அதிகாரி, இராணுவப் பொலிஸ் பயிற்சிப் பாடசாலையின் தளபதி, இராணுவ தலைமையக ஒழுக்க பணிப்பகத்தின் பணிநிலை அதிகாரி 1, 1 வது மற்றும் 2 வது இராணுவப் பொலிஸ் படையணி மற்றும் இராணுவப் பொலிஸ் படையணி சிறப்பு விசாரணை பிரிவு கட்டளை அதிகாரி, 22 வது காலாட் படைப்பிரிவின் கேணல் (நிரவாகம் மற்றும் விடுதி), இராணுவ வழங்கல் பாடசாலை பிரதம பயிற்றுவிப்பாளர், 59 வது காலாட் படைப்பிரிவின் கேணல் (நிரவாகம் மற்றும் விடுதி),தேசிய மாணவச் சிப்பாய் படையணியின் பிரிகேடியர் (நிரவாகம் மற்றும் விடுதி), முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையக பிரிகேடியர் (நிரவாகம் மற்றும் விடுதி), இராணுவ தொண்டர் படையணி பிரிகேடியர் (வழங்கல்), வடக்கு முன்னரங்கு பராமரிப்பு தளபதி, இராணுவ தலைமையக ஒழுக்கப் பணிப்பக பணிப்பாளர் நாயகம் மற்றும் இலங்கை இராணுவப் பொலிஸ் படையணி படைத் தளபதி ஆகிய பதவிகளையும் வகித்துள்ளார்.

அவரது களங்கமற்ற சேவைக்காக, அவருக்கு உத்தம சேவா பதக்கம் வழங்கப்பட்டுள்ளது.

மோட்டார் போக்குவரத்து அதிகாரிகள் பாடநெறி, படையலகு அதிகாரிகள் கணக்காளர் பாடநெறி, படையணி அதிகாரிகள் சமிக்ஞை பாடநெறி, அடிப்படை கணினி பாடநெறி, படையணி இரண்டாம் கட்டளை அதிகாரி பாடநெறி மற்றும் பாராசூட் பாடநெறி, ஒழுக்க அதிகாரி பாடநெறி – இந்தியா, மத்திய தொழிலாண்மை பாடநெறி பாகிஸ்தான், பணிநிலை நிர்வாக பாடநெறி - பாகிஸ்தான், வழங்கள் மற்றும் வள முகாமை பாடநெறி – பாகிஸ்தான், நிதி முகாமை, நிர்வாக மற்றும் வள முகாமை மற்றும் மனித வள முகாமை பாடநெறி - பாகிஸ்தான், அதிகாரிகளின் குற்றப் புலனாய்வுப் பாடநெறி – பாகிஸ்தான், உயர் பாதுகாப்பு முகாமை பாடநெறி – இந்தியா மற்றும் உயர் முகாமைத்துவ பாடநெறி – இந்தியா உட்பட பல உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பாடநெறிகளை அவர் தனது இராணுவ வாழ்க்கையில் முடித்துள்ளார்.

சிரேஷ்ட அதிகாரி, இந்தியாவில் உள்ள ஒஸ்மானியா பல்கலைக்கழகத்தில் முதுகலை முகாமைத்துவ கற்கைகள், இலங்கை பொலிஸ் கல்லூரியில் உயர் துப்பறியும் டிப்ளோமா பாடநெறி, இலங்கை களுத்துறையில் உள்ள பொலிஸ் பயிற்சிப் பாடசாலையில் பொலிஸ் அடிப்படை புலனாய்வுப் பாடநெறி, இலங்கை உயிர்காக்கும் சங்கத்தில் அடிப்படை மீட்புப் பாடநெறி, இலங்கையில் லண்டன் பிஸ்னஸ் ஸ்கூல் மைக்ரோசாப்ட் (Microsoft Office) நிபுணத்துவ சான்றிதழ், இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தில் தடயவியல் அறிவியல் தொடர்பான சான்றிதழ் பாடநெறி, இலங்கையின் உயிர்காக்கும் சங்கத்தில் உயிர்காக்கும் (நரம்பியல் நுரையீரல் புத்துயிர்ப்பு) சான்றிதழ் மற்றும் நிர்வாக மற்றும் போக்குவரத்து நிறுவனத்தின் பட்டய உறுப்பினர் போன்ற பல இராணுவம் அல்லாத உயர் கல்விகளையும் கற்றுள்ளார்.