30th April 2024 10:43:56 Hours
பாகிஸ்தானின் கூட்டுப் படைத் தலைமையக தூதுக்குழுவினர் இலங்கைக்கான தமது சுற்றுப்பயணத்தின் போது இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்களின் அழைப்பின் பேரில் 29 ஏப்ரல் 2024 அன்று இராணுவத் தலைமையகத்திற்கு விஜயம் மேற்கொண்டனர்.
ஐந்து பேர் கொண்ட தூதுக்குழுவில் கூட்டுப் படைத் தலைமையக பணிப்பாளர் நாயகம் லெப்டினன் ஜெனரல் அஹ்சன் குல்ரெஸ், எச்ஐ (எம்), அவரது மனைவி மற்றும் மூன்று சிரேஷ்ட அதிகாரிகள் ஆகியோர் அடங்குவர்.
இராஜதந்திரிகளை இராணுவ நிறைவேற்று பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் டபிள்யூடபிள்யூஎச்ஆர்ஆர்வீஎம்என்டகேபி நியாங்கொட ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யூஎஸ்பீ என்டியூ பீஎஸ்சீ அவர்கள் அன்புடன் வரவேற்று தளபதி அலுவலகத்திற்கு அழைத்துச் சென்றார்.
அவர்களின் சுமுகமான சந்திப்பின் போது, இரு தரப்பினரும் பரஸ்பர அக்கறை கொண்ட விடயங்களில் கருத்துக்களைப் பரிமாறிக்கொண்டனர், இரு நாடுகளின் ஆயுதப் படைகளுக்கிடையேயான நல்லெண்ணம், ஒத்துழைப்பு மற்றும் புரிந்துணர்வு ஆகியவற்றின் நீண்டகால பிணைப்புகளை நினைவு கூர்ந்தனர்.இருதரப்பு ஒத்துழைப்பையும் புரிந்துணர்வையும் மேம்படுத்தும் வகையில், பணிப்பாளர் நாயகம், கூட்டுப் பணியாளர்கள் மற்றும் இலங்கை இராணுவத் தளபதி ஆகியோர் விரிவான உரையாடலை மேற்கொண்டனர்.
மேலும், இராணுவத் தளபதி, இலங்கை இராணுவத்தினருக்கு பயிற்சியளிப்பதில் வழங்கப்பட்ட முன் உதவிகளைப் வழங்கும் வகையில், பயிற்சி தொடர்பான கருத்துக்களையும் தெரிவித்துக் கொண்டார். இந்த ஆதரவு இலங்கை இராணுவ அதிகாரிகள் மற்றும் ஏனைய அணிகளின் திறமைகளை மேம்படுத்துவதிலும், அதன் மூலம் இராணுவ நிபுணத்துவ கலாசாரத்தை வளர்ப்பதிலும் முக்கிய பங்கு வகித்துள்ளது. மேலும், இலங்கை இராணுவத்தை மாற்றியமைக்கும் முயற்சிகளுக்கு ஆதரவளித்து, அதனை அதிக பன்முகத்திறன் மற்றும் திறமைக்கு கொண்டு செல்லும் பாகிஸ்தானின் தாராளமான பங்களிப்புகளுக்கு இராணுவத் தளபதி நன்றி தெரிவித்தார்.
இறுதியில் இரு தரப்பினருக்கும் இடையே நல்லெண்ணச் சின்னமாக நினைவுச் சின்னங்கள் பரிமாறப்பட்டன. லெப்டினன் ஜெனரல் அஹ்சன் குல்ரெஸ், எச்.ஐ (எம்) அவர்கள் செல்வதற்கு முன், விருந்தினர் பதிவேட்டு புத்தகத்தில் சில பாராட்டுக்களை எழுதினார்.