27th April 2024 21:00:14 Hours
இலங்கை முப்படை மருத்துவக் கல்லூரியின் 8 வது தளபதியின் பதவியேற்பு விழா வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 26) கொழும்பு கலதாரி ஹோட்டலில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்கள் கலந்து கொண்டார்.
இராணுவத் தளபதியை இலங்கை இராணுவ மருத்துவப் படையணியின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் பீ.ஏ.சீ பெர்னாண்டோ யூஎஸ்பீ மற்றும் இலங்கை முப்படை மருத்துவக் கல்லூரியின் உறுப்பினர்கள் வரவேற்றனர். அதனைத் தொடர்ந்து, இலங்கை முப்படை மருத்துவக் கல்லூரி சபை உறுப்பினர்களால் சம்பிரதாயங்களுக்கு மத்தியில் பிரதம அதிதி ஊர்வலமாக மண்டபத்திற்கு அழைத்து செல்லப்பட்டார்.
பின்னர், பார்வையாளர்களுக்கு சிறிய ஆவணப்படம் காட்சிப்படுத்தப்பட்டதுடன், தேசிய கீதம் இசைக்கப்பட்டது. பின்னர் வீரமரணமடைந்த போர்வீரர்களை நினைவுகூரும் வகையில் இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.
பின்னர், மங்கல விளக்கு ஏற்றப்பட்டதுடன், சத்திரசிகிச்சை நிபுணர் கொமடோர் (வைத்தியர்) ஆர்.பீ.என்.என் விஜேடோறு யூஎஸ்பீ அவர்கள் தனது வரவேற்பு உரையின் போது அன்றைய பங்கேற்பாளர்களை வரவேற்றார். அதனைத் தொடர்ந்து அன்றைய கௌரவ அதிதியான பேராசிரியர் அலோக பத்திரன அவர்கள் உரையாற்றினார்.
பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட இராணுவத் தளபதி தனது உரையின் போது இராணுவ மருத்துவ நிபுணர்களின் சேவையைப் பாராட்டியதுடன், கடந்த கால மனிதாபிமான நடவடிக்கை மற்றும் கொவிட்-19 இல் அவர்களின் பங்களிப்பை நினைவு கூர்ந்தார்.
பின்னர், புதிதாக நியமிக்கப்பட்ட தளபதி பிரிகேடியர் டபிள்யூ.ஜி.ஆர்.பீ பீரிஸ் அவர்களுக்கு பதக்கம் வழங்கியதுடன் சம்பிரதாய ரீதியிலான பதவியேற்பு இடம்பெற்றது. பின்னர் தனது உரையின் போது, இலங்கை முப்படை மருத்துவக் கல்லூரியின் எதிர்கால திட்டங்களை அவர் முன்வைத்தார்.
அதனைத் தொடர்ந்து கௌரவ செயலாளர் கேணல் டபிள்யூ.எச்.கே. விமலரத்ன அவர்கள் நன்றியுரையை நிகழ்த்தியதுடன் வண்ணமயமான கலாசார நிகழ்ச்சி பார்வையாளர்களை மகிழ்வித்தது. பின்னர், சபை உறுப்பினர்கள் அன்றைய பிரதம விருந்தினரை சம்பிரதாயங்களுக்கமைய நுழைவாயிலுக்கு அழைத்துச் சென்றனர். அன்றைய நிகழ்வுகளின் நினைவாக குழுப்படம் எடுத்துக்கொண்டதுடன் நிகழ்வுகள் நிறைவடைந்தன.
கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேரா ஆர்எஸ்பீ யூஎஸ்பீ என்டியூ பீஎஸ்சீ, இலங்கை இராணுவ பிரதிப் பதவிநிலை பிரதானி மேஜர் ஜெனரல் எஸ்.பீ.ஏ.ஐ.எம்.பி சமரகோன் எச்டிஎம்சீ எல்எஸ்சீ, முப்படையின் சிரேஸ்ட அதிகாரிகள், இலங்கை முப்படை மருத்துவக் கல்லூரியின் உறுப்பினர்கள் மற்றும் வைத்திய அதிகாரிகள் ஆகியோர் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.