22nd April 2024 21:54:40 Hours
பொக்ஸ் ஹில் போட்டியின் போது இடம்பெற்ற விபத்தில் காயமடைந்தவர்களின் மருத்துவ நிலைமை குறித்து விசாரிக்கும் நோக்கத்துடன் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்கள் தியத்தலாவ ஆதார வைத்தியசாலைக்கு விஜயம் மேறகொண்டார்.
இந்த விஜயத்தின் போது, இராணுவத் தளபதி காயங்களின் தன்மை, மருத்துவ முன்னேற்றங்கள் மற்றும் குணப்படுத்தும் செயல்முறைகள் குறித்து மருத்துவ அதிகாரிகளுடன் கலந்துரையாடினார். மேலும், எதிர்பாராத சம்பவத்திற்கு ஆழ்ந்த வருத்தம் தெரிவித்த அவர், காயமடைந்தவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரிடமும் உரையாடினார்.
இராணுவ பிரதி பதவிநிலைப் பிரதானி மேஜர் ஜெனரல் எஸ்.பீ.ஏ.ஐஎம்.பி சமரகோன் எச்டிஎம்சி எல்எஸ்சி, மத்திய பாதுகாப்பு படை தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் எஸ்.ஆர்.பி அலுவிஹார ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சீ, இலங்கை இராணுவத்தின் நிறைவேற்று பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் டபிள்யூ.டபிள்யூ.எச்.ஆர்.ஆர்.வி.எம்.என்.டி.கே.பி நியங்கொட ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யூஎஸ்பீ என்டீயூ பீஎஸ்சீ, சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் இந்த விஜயத்தின் போது கலந்து கொண்டனர்.
பொக்ஸ் ஹில் சுப்பர் குரோஸ் - 2024 போட்டி 2024 ஏப்ரல் 21 ஆம் திகதி பொக்ஸ் ஹில் சுப்பர் குரோஸ் ஓடுபாதையில் நடைபெற்றது. 1500சீசீ போர்ட் லேன்ஸர் மெஸ்டா 323 (1500cc Ford Laser Mazda 323) பிரிவின் கீழ் நடைபெற்ற 17 வது போட்டியின் போது ஆரம்ப கோட்டிலிருந்து 150 மீட்டர் தொலைவில் பைனஸ் கோனர் அருகே இரண்டு கார்கள் மோதிக்கொண்டன. இவ்வாறு மோதிக்கொண்ட கார்களில் ஒரு கார் ஓடுபாதையை விட்டு விலகி சென்று மோதியதில் 07 பேர் உயிரிழந்துடன், 21 பேர் காயமடைந்து தியத்தலாவை ஆதார வைத்திசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பின்னர், பாதிக்கப்பட்டவர்களில் 10 பேர் மேலதிக சிகிச்சைக்காக பதுளை போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர். இச்சம்பவத்தை தொடர்ந்து போட்டி ஏற்பாட்டாளர்களால் இப்போட்டி இடைநிறுத்தப்பட்டது.