02nd April 2024 14:40:46 Hours
6 வது இலங்கை பீரங்கி படையணி படையினரால், 2024 மார்ச் 28 திகதி மீவிட்டிகம்மன பிரதேசத்தின் ஆதரவற்ற குடும்பத்திற்கு புதிய வீடொன்றினை நிர்மாணிப்பதற்கான அடிக்கல் நாட்டப்பட்டது. இந்த முயற்சியானது 14 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் கே.எ.டபிள்யூ.என்.எச்.பி பண்டாரநாயக்க யூஎஸ்பீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் 141 வது காலாட் பிரிகேட் தளபதியின் மேற்பார்வையில் முன்னெடுக்கப்பட்டது.
திரு. சப்ரி, “லெட் அஸ் பி ஏ செடோ” அமைப்பின் செயலாளர் திருமதி சபிதா விந்தனி சரப், மற்றும் திரு.கிஹான் மலல்கொட ஆகிய நன்கொடையாளர்கள் படையினருக்கு நிதி அனுசரணை வழங்க உறுதியளித்துள்ளனர்.
இந்நிகழ்வில் 14 வது காலாட் படைப்பிரிவின் தளபதி பிரதம அதிதியாக கலந்து கொண்டார். இந்நிகழ்வில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள், சிப்பாய்கள், குடும்ப உறுப்பினர்கள் மற்றும் கிராம மக்கள் கலந்துகொண்டனர்.