31st March 2024 18:01:01 Hours
இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்கள் 2024 மார்ச் 30 அன்று சாலியபுர கஜபா படையணி தலைமையகத்தில் கஜபா படையணி படையினருக்கு உரையாற்றினார்.
கஜபா படையணி தலைமையகத்திற்கு வருகை தந்த இராணுவ தளபதி அவர்களை யாழ். பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் எம்ஜிடபிள்யூடபிள்யூடபிள்யூஎம்சிபி விக்ரமசிங்க ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சீ அவர்கள் இராணுவ சம்பிரதாயங்களை தொடர்ந்து அன்புடன் வரவேற்றார்.
பின்னர், படையினர் மத்தியில் உரையாற்றிய இராணுவத் தளபதி, இராணுவத்தின் பெருமைக்குரிய உறுப்பினர்கள் என்ற வகையில் சட்டத்திற்குப் புறம்பான செயற்பாடுகளைத் தவிர்த்து, சவாலான காலங்களில் ஒழுக்கத்தைப் பேணுவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். மேலும், தொழில்முறையின் உயர் தரத்தைப் பேணுவதன் முக்கியத்துவத்தை அவர் எடுத்துரைத்துடன் தற்போதைய நலத் திட்டங்களின் நிலையை விளக்கினார்.
முதலாம் படைத் தளபதி மேஜர் ஜெனரல் எஸ்பி அமுனுகம ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ இராணுவ செயலாளர் மேஜர் ஜெனரல் ஐஏஎன்பி பெரேரா ஆர்டப்ளியூபீ யூஎஸ்பீ என்டியூ பீஎஸ்சீ, சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள், மற்றும் சிப்பாய்கள் இந் நிகழ்வில் கலந்துகொண்டனர்.