29th March 2024 11:24:18 Hours
தல்செவன இராணுவ ஓய்வு விடுதியின் ஊர்காவற்துறையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட கிளை 28 மார்ச் 2024 அன்று திறந்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.
இங்கு வருகை தந்த பிரதம அதிதியை யாழ் பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் எம்ஜிடபிள்யூடபிள்யூடபிள்யூஎம்சிபி விக்ரமசிங்க ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சீ அவர்களால் வரவேற்கப்பட்டதை தொடர்ந்து இராணுவத் தளபதி நினைவு பதாகையை திரைநீக்கம் செய்து நாடா வெட்டி புதிய வசதியை திறந்து வைத்ததுடன் வளாகத்தை சுற்றி பார்வையிட்டார்.
புதிய கிளையில் 80 விருந்தினர்கள் தங்குமிடமும், ஒரே நேரத்தில் 32 விருந்தினர்களுக்கான சாப்பாட்டு அறையும் உள்ளது. இது அப்பகுதியில் சரியான தங்குமிடத்திற்கான முக்கியமான தேவையை நிவர்த்தி செய்கிறது. தல்செவன இராணுவ ஓய்வு விடுதி - ஊர்காவற்றுறை ஆரம்ப கட்டத்தில் உள்ளது, கூடுதல் வசதிகளுக்கான திட்டங்கள் விரைவில் மேற்கொள்ளப்படும்.
அதன் பின்னர், இராணுவத் தளபதி வணக்கத்திற்குரிய யாழ் ஆயர் ஜஸ்டின் பெர்னார்ட் ஞானப்பிரகாசம் அவர்களை சில சிரேஷ்ட அதிகாரிகளுடன் சந்தித்து கலந்துரையாடினார்.
பின்னர், இராணுவத் தளபதி 52 வது காலாட் படைப்பிரிவுக்கு விஜயத்தை மேற்கொண்டார். இதன்போது 51 வது காலாட் படைப் பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் எஸ்டபிள்யூபி வெலகெதர ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யூஎஸ்பீ என்டிசீ அவர்கள் இராணுவ தளபதியை வரவேற்றார். இதன் போது தளபதியின் வாகன தொடரணிக்கு படையினரால் மரியாதை வழங்கப்பட்டது.
யாழ் படையினருக்கு உரையாற்றிய இராணுவத் தளபதி, சவாலான காலங்களில் ஒழுக்கத்தைப் பேணுவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தியதுடன், இராணுவத்தின் புதிய மற்றும் அதன் பணியாளர்களுக்கான நலன்புரி திட்டங்களை முன்னிலைப்படுத்தினார். இறுதியில், இராணுவத் தளபதி மற்றும் யாழ் தளபதிக்கு இடையில் நினைவுச் சின்னங்கள் பரிமாற்றிக்கொள்ளப்பட்டன. இந்த விஜயத்தை நினைவு கூறும் வகையில் இராணுவத் தளபதி யாழ் பாதுகாப்பு படைத் தலைமையக வளாகத்தில் புளியங் கன்று ஒன்றை நட்டினார்.
இராணுவச் செயலாளர், 52 மற்றும் 55 வது காலாட் படைப்பிரிவுகளின் தளபதிகள், யாழ் வழங்கல் கட்டளை தளபதி, பிரிகேட் தளபதிகள், கட்டளை அதிகாரிகள், சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் நிகழ்வில் பங்குபற்றினர்.