28th March 2024 13:38:55 Hours
நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்பு சேவைகள் திணைக்களம் மற்றும் ஹப்புத்தளை பிரதேச செயலகம் இணைந்து 26 மார்ச் 2024 அன்று ஹப்புத்தளை கல்வி வலயத்தில் உள்ள சிறார்களின் மனோபாவங்கள் மற்றும் குணநலன்களை மேம்படுத்தும் நோக்கில் நிகழ்ச்சி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டது.
இந்த நிகழ்வு 260 பாடசாலை மாணவர்களின் பங்கேற்புடன், 'ஒரு பாராட்டுக்குரிய பிள்ளையாக இருப்பது எப்படி' என்ற தொனிப்பொருளில் இத்திட்டம் நடத்தப்பட்டது. இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக மத்திய பாதுகாப்பு படை தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் எஸ்ஆர்பீ அலுவிஹார ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சீ அவர்கள் கலந்து கொண்டார்.
மத்திய பாதுகாப்பு படை தலைமையக தளபதியின் பணிப்புரையின் கீழ் மத்திய பாதுகாப்பு படை தலைமையக படையினர் இராணுவ இசைக்குழுவை உள்ளடக்கி இசை நிகழ்வு நடாத்துவதற்கு உதவிகளை வழங்கியதுடன் பண்டாரவளை சிங்க கழகத்தின் ஆதரவுடன் சிற்றுண்டியும் வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள், அரச அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்து கொண்டனர்.