25th March 2024 15:46:12 Hours
11 வது கெமுனு ஹேவா படையணியினால் அதன் ‘பி’ குழு வளாகத்தில் 23 மார்ச் 2024 அன்று நந்திமித்ரகம பிரதேசத்தின் பார்வை குறைபாடுள்ளவர்களுக்கு உதவும் நோக்கில் கண் மருத்துவ முகாமை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
358 பார்வை குறைபாடுள்ளவர்கள் கண் பரிசோதனை செய்து பயனடைந்ததுடன், திட்டத்தின் முதல் கட்டத்தில் மூக்கு கண்ணாடிகளும் வழங்கப்பட்டன. மேலும், 65 நோயாளிகள் கண்புரை அறுவை சிகிச்சைக்காக கண் சிறப்பு மருத்துவரின் ஆலோசணைக்காக அனுப்பப்பட்டனர்.
புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற உதவி அமைப்பின் செயலாளரான வைத்தியர் சர்வேஸ்வரன் அவர்களின் நிதி பங்களிப்பில் முன்னெடுக்கப்பட்ட இத்திட்டமானது 56 வது காலாட் படைப்பிரிவு தளபதி மேஜர் ஜெனரல் எஸ். கஸ்தூரிமுதலி ஆர்எஸ்பீ என்டிசி பீஎஸ்சி அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் நடாத்தப்பட்டது.
சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள், சிப்பாய்கள், புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற உதவி அமைப்பின் பணியாளர்கள் மற்றும் பிரதேசவாசிகள் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.