Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

27th February 2024 18:20:34 Hours

24 வது காலாட் படைப்பிரிவின் படையினரால் மாணவர்களுக்கு பாடசாலை உபகரணம் வழங்கல்

24 வது காலாட் படைபிரிவின் படையினர் 2024 பெப்ரவரி 20 ஆம் திகதி அம்பாறை பக்மிட்டியாவ பாடசாலை மாணவர்களுக்கான பாடசாலை உபகரண வழங்கும் நன்கொடை நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தனர். இந்த திட்டத்தில் ரூ. 400,000, க்கும் பெறுமதியான பாடசாலை உபகரணங்கள் 129 மாணவர்களுக்கு வழங்கப்பட்டன.

இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக 24 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் டபிள்யூ சந்திரசிறி ஆர்எஸ்பீ யூஎஸ்பீ பீஎஸ்சீ அவர்கள் கலந்து கொண்டார். ஹேமாஸ் உற்பத்தி தனியார் நிறுவனத்தின் திரு டிஎம் ஜயரத்ன அவர்களின் நிதியுதவியில் இத் திட்டம் முன்னெடுக்கப்பட்டது.

சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள், சிப்பாய்கள் மற்றும் ஹேமாஸ் உற்பத்தி தனியார் நிறுவனத்தின் பிரதிநிதிகள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.