Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

23rd November 2022 19:41:36 Hours

‘நவலோக விருசுவ சரண’ இராணுவம் மற்றும் குடும்பங்களுக்கு சுகாதார உடல்நலப் பலன்களை வழங்குவதற்கான சிறப்புரிமை அட்டை

இராணுவ வீரர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்கு பலதரப்பட்ட அதிநவீன சுகாதார நலன்களை வழங்கும் நிமித்தம் 'நவலோக விருசுவ சரண' சலுகை அட்டை (23) காலை நவலோக வைத்தியசாலை வளாகத்தில் இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே தலைமையில் இடம்பெற்றது. இந் நிகழ்வில் பிரதம அதிதியாக இராணுவத் தளபதி, இராணுவ சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி ஜானகி லியனகே மற்றும் நவலோக வணிக குழுமத்தின் (தனியார்) தலைவர் வைத்தியர் ஜயந்த தர்மதாச ஆகியோர் கலந்து கொண்டனர்.

இராணுவ சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி ஜானகி லியனகே அவர்களின் முன்முயற்சியால் 'நவலோக விருசுவ சரண' சிறப்புரிமை அட்டை உருவாக்கப்பட்டது, பின்னர் அதை ஒரு சிறப்புரிமையாக மாற்றும் பொருட்டு சிரேஷ்ட சமூக ஆர்வலரான வைத்தியர் அருண தம்மிக்க கருணாரத்னவினால் போர் வீரர்கள் மற்றும் அவர்களை சார்ந்தவர்களுக்காக விநியோகிக்கும் கருத்துருவாக்கம் செய்யப்பட்டது. இராணுவ சேவை வனிதையர் பிரிவின் ஒருங்கிணைப்பாளர் கேணல் நளிந்திர மஹாவிதான இந்த திட்டத்தை செயல்படுத்த ஆதரவளித்தார்.

அதற்கமைய இராணுவ சேவை வனிதையர் பிரிவின் செயற்பாடுகள் தொடர்பான சுருக்கமான வீடியோ காட்சிகள் மற்றும் முன்மொழியப்பட்ட ‘விருசுவ சரண’ திட்டத்தின் திரையிடலுடன் அன்றைய நிகழ்ச்சி நிரல் தொடங்கியது. இந்த கருத்தை அதன் நிறுவுனர் வைத்தியர் அருண தம்மிக்க கருணாரத்ன விளக்கினார். இந்த திட்டத்தை நாடு முழுவதும் உள்ள இராணுவ வீரர்களால் நிகழ்த்தப்படும் ஒப்பிடமுடியாத சேவைக்கு மரியாதை செலுத்தும் வகையில் இதனை முன்னெடுப்பதாக கூறினார்.

இந்த சிறப்பு அட்டை இராணுவத்தினர் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்கு விலையுயர்ந்த மருத்துவ ஆய்வுகள், சிகிச்சை முறைகள், ஆலோசனைகள், அதிநவீன மற்றும் மேம்பட்ட மருந்துகள் மற்றும் அறுவை சிகிச்சைகள் ஆகியவற்றிற்கு கணிசமான சலுகைகள் மற்றும் ஏனைய முன்னுரிமை வசதிகளைப் பெற உதவுகிறது என்பது குறிப்பிடதக்கதாகும்.

அங்குரார்ப்பண நிகழ்வில் முதன் முதலாக ‘நவலோக விருசுவ சரண’ சிறப்புரிமை அட்டைகள் இராணுவத் தளபதியினால் இராணுவ வீரர்களுக்கு அடையாளமாக கையளிக்கப்பட்டது. இந்நிகழ்வில் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே, இராணுவ சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி ஜானகி லியனகே மற்றும் நவலோக வணிக குழுமத்தின் (தனியார்) தலைவர் கலாநிதி ஜயந்த தர்மதாச, இராணுவ பதவி நிலை பிரதானி மேஜர் ஜெனரல் டி.ஜே. கொடித்துவக்கு பிரதி பதவி நிலை பிரதானி மேஜர் ஜெனரல் சிடி வீரசூரிய இராணுவ சேவை வனிதையர் பிரிவின் பிரதி தலைவி திருமதி ஷிரோமலா கொடித்துவக்கு மற்றும் இராணுவ சேவை வனிதையர் பிரிவின் செயலாளர் திருமதி தனுஷா வீரசூரிய, ஆகியோர் கலந்துகொண்டனர்.