Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

25th September 2020 11:30:53 Hours

வெள்ளிக்கிழமை வரை நாடு முழுவதும்275, 590 பிசிஆர் பரிசோதனை- நொப்கொ தெரிவிப்பு

இன்று காலை (25) ஆம் திகதி அறிக்கையின் படி,வெளிநாட்டில் இருந்து வருகை தந்ந 09பேருக்கு கொரோனா தொற்று நோய் இருப்பதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களில் மாலைத்தீவில் இருந்து வருகை தந்து தம்மின்ன தனிமைபடுத்தல் மையத்தில் ஒருவரும், ஈரானில் இருந்து வருகை தந்து கல்பிட்டிய தனிமைபடுத்தல் மையத்தில் இருவரும், துபாயில் இருந்து வருகை தந்து ராஜகிரிய ஆயுர்வேததனிமைபடுத்தல் மையத்தில் ஒருவரும்,கட்டாரில் இருந்து வருகை தந்து ராஜகிரிய மற்றும் விடத்தபலைதனிமைபடுத்தல்மையங்களில் 03 நபர்களும் தனிமைபடுத்தப்பட்டுள்ளனர் என்று கொவிட் மையம் தெரிவித்துள்ளது.

இன்று (22) காலை 6.00 மணி வரை கந்தக்காடு மற்றும் சேனபுர போதைப் பழக்கத்திற்கு அடிமையானவர்களுக்கான சிகிச்சை மற்றும் புனர்வாழ்வு மையங்களில் தனிமைப்படுத்தப்பட்டிருந்தவர்களின் எண்ணிக்கை 650ஆகும்.துபாயில் இருந்து EK 648 விமான மூலம் 53பயணிகள்,தோஹாவில் இருந்து QR 668 விமானம் மூலம் 03 பயணிகள் மற்றும்ஜப்பான்,நைட்டாவில் இருந்து UL 455 விமான மூலம் 04 பயணிகள்இன்று பிற்பகல் கொழும்பு வந்தடைந்தனர். அவர்கள் அனைவரும் முப்படையினரால் நிருவகித்து வரும் தனிமைப்படுத்தல் மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இன்றைய தினம் (25) தனிமைப்படுத்தப்பட்ட 18 நபர்கள் பி.சி.ஆர் பரிசோதனைகளின் பின்பு தனிமைப்படுத்தல் மையங்களிலிருந்து வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளனர். இவர்கள் நிபுன பூஸ்ஸ தனிமைப்படுத்தல்மையம்(04), கல்பிட்டிய ரிவலதனிமைப்படுத்தல் மையம்(01),ஜெட் விங் லகூன் தனிமைப்படுத்தல்மையம் (06), ராஜகிரிய ஆயுர்வேத தனிமைப்படுத்தல்மையம்(08), இலங்கை இராணுவ பொதுச் சேவைப் படையணி தனிமைப்படுத்தல்மையம்(01),ஹோட்டல் டொல்பின் தனிமைப்படுத்தல்மையம்(39) மற்றும் ஜெட் விங் புளு தனிமைப்படுத்தல் மையம்07 ஆகியவெற்றில் தனிமைப்படுத்தப்பட்டவர்களாவர்.

அதேபோல், இன்று 22 ஆம் திகதி காலை வரையான காலப் பகுதியில் , 44788நபர்கள் தனிமைப்படுத்தலின் பின்பு வெளியேறியுள்ளனர். இன்று (25) காலை அறிக்கையின் பிரகாரம் முப்படையினரால் நிருவகித்து வரும் 68 தனிமைப்படுத்தல் மையங்களில் 6562நபர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். நேற்று (24) திகதிக்குள் நாடாளாவிய ரீதியாக மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனைகளின் எண்ணிக்கை 1612ஆகும். இதுவரை நாடாளாவிய ரீதியாக நடாத்தப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனைகளின் மொத்த எண்ணிக்கை 275590.ஆகும்.

இதற்கிடையில், குணமடைந்த 11கொவிட்- 19 தொற்றாளர்கள் இன்று (25) அதிகாலை வைத்தியசாலைகளை விட்டு வெளியேறயுள்ளனர். அவர்கள் அனைவரும் வெளிநாட்டில் இருந்து வருகை தந்தவர்கள். இன்று (25) காலை 6.00 மணியளவில், கந்தகாடு மற்றும் போதைப்பொருள் அடிமைகளுக்கான சேனாபுர சிகிச்சை மற்றும் புனர்வாழ்வு மையங்களில் தனிமைப்படுத்தப்பட்ட கைதிகளின் மெடாத்த எண்ணிக்கை 646 ஆக உள்ளது. அவர்களில், தொற்றுக்குள்ளான 04பேர் இன்னும் சிகிச்சையில் உள்ளனர்.

வெளிநாட்டிலிருந்து வந்தவர்களைத் தவிர சமூகத்திலிருந்து வேறு எந்த கொரோனா தொற்று சம்பவங்களும் பதிவாகவில்லை என்பதால், அனைத்து இலங்கையர்களும் சுகாதார அதிகாரிகளின் அறிவுறுத்தல்களின்படி தங்கள் சுகாதார நடைமுறைகளைத் தொடர்ந்து அதன் பரவலைத் தடுக்கவும் உதவுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். (நிறைவு) Nike sneakers | Air Jordan