03rd April 2024 13:51:28 Hours
விஷேட படையணி படையினர் வண. நாவுல அத்துல தேரர் மற்றும் வண. முருத்தெனியே சுஜாத தேரர் ஆகியோரின் அழைப்பை ஏற்று இரண்டு இரத்த தான நிகழ்வுகளில் கலந்து கொண்டனர். இந்த இரத்த தான நிகழ்வுகள் 2024 மார்ச் 31 ஆம் திகதி மாத்தளை, மடவல உல்பத்த, மஹாமெயுனவ விகாரை மற்றும் மினுவாங்கொடை சர்வதேச பௌத்த நிலையம் ஆகிய இடங்களில் நடைபெற்றன.
மாத்தளை வைத்தியசாலையின் இரத்த வங்கியின் அத்தியாவசிய தேவையை நிவர்த்தி செய்யும் வகையில் 50 இற்கும் மேற்பட்ட விசேட படையணியின் படையினர் இரத்தம் வழங்கினர். இத்திட்டங்கள் விஷேட படையணியின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் ஜே.பீ.சி. பீரிஸ் ஆர்டப்ளியூபீ ஆர்எஸ்பீ என்டிசி அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் மேற்கொள்ளப்பட்டன.