Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

13th November 2019 07:00:47 Hours

வாழ்வாதாரத்தில் பின் தங்கிய குடும்பத்தினருக்கு வன்னி படையினரால் உதவிகள்

வன்னி பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் ஜகத் குணவர்தன அவர்களது வழிக்காட்டலின் கீழ் மஹாசேனபுர உரவ பதவிய பிரதேசத்தில் வசித்து வரும் பின் தங்கிய குடும்பத்தைச் சேர்ந்த குடும்பத்தினருக்கு புதிய வீடொன்று நிர்மானிக்கப்பட்டு இம் மாதம் (11) ஆம் திகதி கையளிக்கப்பட்டன.

62 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் தம்மிக ஜயசிங்க அவர்களது பணிப்புரைக்கமைய 622 ஆவது படைத் தலைமையகத்தின் தலைமையில் 20 ஆவது கஜபா படையணியின் பங்களிப்புடன் இந்த புதிய வீடு நிர்மானிக்கப்பட்டு கையளிக்கப்பட்டன.

இலங்கையை பிறப்பிடமாவும் அவுஸ்திரேலியாவை வசிப்பிடமாக கொண்ட திரு நிஷான் வெத்தசிங்க அவர்களது நிதி அனுசரனையுடன் 212 படைத் தலைமையகத்தின் கட்டளை தளபதி கேர்ணல் அனில் பீரிஸ் அவர்களது பூரன ஒத்துழைப்புடன் இந்த வீடு நிர்மானிக்கப்பட்டு வீட்டு உரிமையாளரான திரு N. G கருணாரத்ன அவர்களுக்கு வன்னி பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் ஜகத் குணவர்தன அவர்களினால் வழங்கி வைக்கப்பட்டன.

புதிதாக நிர்மானிக்கப்பட்ட இந்த வீட்டில் அமர்வு அறை, சாப்பாட்டு அறை, படுக்கை அறைகள் போன்ற அனைத்து வசதிகளையும் உள்ளடக்கியது மற்றும் அத்தியாவசிய வீட்டு உபயோகப் பொருட்கள், மின்சார உபகரணங்கள் மற்றும் தளபாடங்கள் இந்த வீட்டு திறப்பு விழாவின் போது இந்த பயனாளிகளுக்கு இராணுவத்தினரால் வழங்கி வைக்கப்பட்டன.

இந்த புதிய வீடானது சமய அனுஷ்டான ஆசிர்வாத நிகழ்வுகளின் பின்பு பயனாளிகளுக்கு வழங்கி வைக்கப்பட்டன.

இந்த திறப்பு விழா நிகழ்வில் 62 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி, 212 படைத் தலைமையகத்தின் கட்டளை தளபதி, 20 ஆவது கஜபா படையணியின் கட்டளை அதிகாரி மற்றும் இராணுவ சிரேஷ்ட அதிகாரிகள் இணைந்திருந்தனர். Mysneakers | UK Trainer News & Releases