Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

16th January 2019 18:39:39 Hours

வடக்கு மாகாணங்களில் தனியாரது காணிகள் விடுவிப்பதற்கு நடவடிக்கைகள்

(ஊடக அறிக்கை)

மேன்மை தங்கிய ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்களது எண்ணக் கருவிற்கமைய இலங்கை இராணுவத்தினரால் நாடாளவியல் ரீதியாக தனியாரது காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளது. மேலும் இம்மாதம் (21) ஆம் திகதி திங்கட் கிழமை முல்லைத்தீவு மற்றும் வடக்கு மாகாணங்களில் 1201.88 ஏக்கர் நிலப்பரப்புகள் விடுவிக்கப்படவுள்ளது.

கிளிநொச்சியில் 972 ஏக்கர் நிலமும், முல்லைத்தீவில் 120 ஏக்கர் இராணுவ பண்ணைகள் இயங்கி வந்த நிலப் பரப்புக்களும், யாழ்ப்பாணம் மற்றும் வன்னியில் 46.11 ஏக்கர் நிலமும், யாழ்ப்பாணத்திலும் வன்னியிலும் 63.77 ஏக்கர் தனியார் நிலமும் முல்லைத்தீவில் இந்த நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் விடுவிக்கப்படவுள்ளது.

நாச்சிக்குடா, வேளான்குளம் மற்றும உடயார்கட்டுகுளம் இராணுவ பண்ணை நிலப்பரப்பில் உள்ள 1201.88 ஏக்கர் நிலங்கள் உத்தியோகபூர்வமாக வடமாகாண ஆளுனர், மாவட்ட செயலாளர்கள், பிரதேச செயலாளர்களின் பங்களிப்புடன் வழங்கப்படவுள்ளது.

தேசிய பாதுகாப்புக்கு பங்கம் விளைவிக்காத வகையில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இந்த நிலப் பரப்புக்கள் விடுவிப்பதற்காக கடந்த ஆண்டுகளில் ஜனாதிபதி செயலகத்தின் மூலம் தீர்மானம் எடுக்கப்பட்டது. அதன் பிரகாரம் இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக அவர்களது தலைமையில் இந்த காணி விடுவிப்பு திட்டங்கள் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் மேற்கொள்ளப்பட்டன.(முடிவு) Running Sneakers | Mens Flynit Trainers