Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

13th March 2019 17:31:14 Hours

யாழில் படையணிகளுக்கிடையிலான ஆயுத ஊக்கம் தொடர்பான வினாவிடைப் போட்டிகள்

2019ஆம் ஆண்டிற்கான சமாதானம் மற்றும் படையணிகளுக்கிடையிலான ஆயுத ஊக்கம் தொடர்பான வினாவிடை போட்டியானது இராணுவத் தளபதியான லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க அவர்களின் பங்களிப்போடு கடந்த திங்கட் கிழமை (11) யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகத்தில் இடம் பெற்றது.

அந்த வகையில் யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழ் இயங்கும் 25காலாட் படையணிகள் மற்றும் ஏனைய படையணிகளை உள்ளடக்கி இடம் பெற்றதோடு இப் போட்டிகளின் இறுதிச் சுற்றில் 4ஆவது இலங்கை சிங்கப்ப படையணி மற்றும் 5ஆவது விஜயபாகு காலாட் படையணி போன்றவை போட்டியிட்டன.

இறுதியில் 4ஆவது இலங்கை சிங்கப்ப படையணி வெற்றி பெற்றதோடு 5ஆவது விஜயபாகு காலாட் படையணி இரண்டாம் இடத்தைப் பெற்றுக் கொண்டதுடன் மூன்றாம் இடத்தை 17ஆவது கெமுனு ஹேவா படையணி பெற்றுக் கொண்டது.

இப் போட்டி நிகழ்வில் யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் தளபதியான மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாராச்சி அவர்களின் அழைப்பை ஏற்று கலந்து கொண்ட இராணுவத் தளபதியான லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க அவர்களால் போட்டிகளில் வெற்றி பெற்ற படையணிகளான 4ஆவது இலங்கை சிங்கப்ப படையணி 5ஆவது விஜயபாகு காலாட் படையணி மற்றும் 17ஆவது கெமுனு ஹேவா படையணி போன்றவற்றிற்கு பணப் பரிசில்கள் வழங்கப்பட்டது.

இப் பரிசளிப்பு விழாவில் மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாராச்சியவர்கள் உள்ளடங்களாக பல உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். Authentic Nike Sneakers | Sneakers