Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

29th July 2021 14:00:38 Hours

முல்லைத்தீவு தளபதி 681 வது பிரிகேட் தலைமையகம் விஜயம்

முல்லைத்தீவு பாதுகாப்புப் படை தலைமையகத்தின் புதிய தளபதியாகப் பொறுப்பேற்ற மேஜர் ஜெனரல் சிசிர பிலபிட்டிய பின்னர், புதன்கிழமை (22) 68 வது படைப்பிரிவின் தலைமையகத்தின் 681 வது பிரிகேட் தலைமையகத்திற்கு தனது முதல் விஜயத்தை மேற்கொண்டார்.

681 வது பிரிகேட் தளபதி பிரிகேடியர் நளின் ஹெட்டியாராச்சி பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதியை அன்புடன் வரவேற்றார். பின்னர் அவரது வருகையை குறிக்கும் வகையில் மரக்கன்று ஒன்று நாட்டி வைக்கப்பட்டது. பின்னர் 681 வது பிரிகேட் தளபதி பிரிகேட்டின் வகிப்பங்கு மற்றும் பணிகள் குறித்து விரிவான விளக்கத்தை வழங்கினார். பின்னர் 681 வது பிரிகேட்டின் கீழ் சேவை செய்யும் கட்டளை அதிகாரிகள் மற்றும் படையினருக்கு பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி உரையாற்றினார்.

பிரிகேட் தளபதிகள், கட்டளை அதிகாரிகள் மற்றும் 681 வது பிரிகேட்டின் படையினர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.