Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

23rd September 2020 13:20:38 Hours

மாலைதீவு உயர்ஸ்தானிகா பாதுகாப்பு இணைப்பதிகாரி இராணுவத் தளபதியை சந்திப்பு

இலங்கைக்கான மாலைதீவு உயர்ஸ்தானிகாரியாலயத்தின் பாதுகாப்பு இணைப்பதிகாரியான லெப்டினன்ட் கொமாண்டர் இஸ்மயில் நசீர் அவர்கள் இம் மாதம் 21 ஆம் திகதி கொவிட்-19 மைய தலைவரும், பாதுகாப்பு தலைமை பிரதானி மற்றும் இராணுவ தளபதியான லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்களை இராணுவ தலைமையகத்தில் சந்தித்தார்.

இவர்களது இச்சந்திப்பின் போது பரஸ்பர நலன் சார்ந்த விடயங்களில் இராணுவத் தளபதியுடன் வெளிப்படையான கருத்துக்களை பரிமாறிகொண்டு இலங்கையில் கொவிட்-19 தொற்றுநோயின் கட்டுப்பாட்டு முறைகள் தொடர்பாக கலந்துரையாடி, ஜனாதிபதியின் வழிக்காட்டலின் கீழ் கொவிட்- 19 தடுப்பு பணிகளை முப் படையினர் அர்பணிப்புடன் செயல்படுவதை முன்னிட்டு தனது நன்றியினையும் இராணுவ தளபதிக்கு தெரிவித்தார்.

இச் சந்திப்பின் இறுதியில் நல்லிணத்தை மேம்படுத்தும் நோக்கத்துடன் இருவருக்கும் இடையில் நினைவுச் சின்னங்கள் பரிமாறப்பட்டன என்பது குறிப்பிடதக்க விடயமாகும். Sportswear Design | Sneakers Nike