Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

21st September 2019 09:50:03 Hours

மாணவ குழுவினாரால் 'துருலியா வெனுவென் அபி' வில்பத்து திட்டத்திற்கு’ நிதியுதவி மற்றும் களிமண் பானைகள் அன்பளிப்பு

சுற்றுபுறசூழலின் நிலைத்தன்மைக்கு விதிவிலக்கான இயற்கையின் நினைவுச்சின்னமாக கருதக்கூடிய கொஹுவலெவில் உள்ள வைட்லீப் பெர்போர்மிங் ஆர்ட்ஸ் எகடமியுடன் இணைக்கப்பட்ட மாணவர்கள், இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்ளை கடந்த புதன்கிழமை (18) ஆம் திகதி இராணுவ தலைமையகத்தில் வைத்து சந்தித்து இராணுவத்தின் தற்போதைய 'துருலியா வெனுவென் அப்பி' வில்பத்து திட்டத்திற்கு நீர் தேக்கி வைக்கக்கூடிய களிமண்ணால் தயாரிக்கப்பட்ட பானைகள் மற்றும் 2 லட்சம் பெறுமியான பணத்தினையும் வழங்கினர்.

எகடமியின் பணிப்பாளர் திரு. நாலக சுவர்ணதிலக மற்றும் ஒவ்வொன்றிலும் சுமார் 7 லிட்டர் தண்ணீரைத் தக்க வைத்துக் கொள்ளக்கூடிய 1000 களிமண் பானைகளை சேகரிக்க சிரமப்பட்ட 10 ஆம் வகுப்புக்குக் கீழே கல்வி கற்கும் ஒன்பது மாணவர்களின் பிரதிநிதிக் குழுவும் சேர்ந்து, இராணுவத் தளபதி அவர்ளை சந்தித்து, குறித்த பண நன்கொடை மற்றும் கடந்த வெள்ளிக்கிழமை (13) 54 பிரிவு தலைமையகத்திற்கு 1000 பானைகளை ஒப்படைத்த சம்பந்தமான சிறப்பு திட்ட அறிக்கையனையும் வழங்கினர் .

இந்த முயற்சியின் பின்னணியின் முன்னோடி மாணவியான களிந்தி வனிகசூரிய, தளபதியிடம் விளக்கமளிக்கையில்,அண்மையில் வில்பத்துக்கு தான் தனது குடும்பத்தினருடன் மேற்கொண்ட பயணத்தின் போது கடும் வெயிலின் மத்தியில் தியாகம் மற்றும் அர்ப்பணிப்புடன் இராணுவதினர் 50 ஏக்கருக்கும் அதிகமான நிலத்தில் மரக்கன்றுகளை நடவு செய்தை தான் தனது கண்களால் பார்த்தாக விக்கமளித்தார்.மேலும் தேசிய முயற்சிக்கு இராணுவம் இப்போது போதுமான அளவு மரக்கன்றுகளைப் பெற்றிருந்தாலும் கூட, வறண்ட வானிலை மற்றும் நீர்வழங்கல் பற்றாக்குறை காரணமாக தொடர்ந்து நீர்ப்பாசனம் செய்வது மற்றும் அந்த மரக்கன்றுகளை வளர்ப்பது ஒரு சவாலாக உள்ளது என்றும் அவர் கூரினார்.

ஒவ்வொரு மரக்கன்றின் இருபுறமும் இதுபோன்ற இரண்டு நீர் நிரப்பப்பட்ட பானைகளை புதைத்து சவ்வூடுபரவல் செயல்முறை மூலம் தாவரங்களுக்கு நீர் வழங்குவதற்கான சாத்தியக்கூறுகள் பற்றி அறிந்து, பின்னர் எகடமிக்கு திரும்பியபோது மேற்கூறிய சிறுமி இதுபோன்ற 1000 பானைகளை 2 லட்சம் ரூபாய் செலவில் பைலட் திட்டம்த்தின் ஊடாக இராணுவத்திற்கு வாங்க முன்மொழிந்தார். பிரத்தியேக நோக்கத்திற்காக நிதி திரட்டும் பிரச்சாரமானது சில வாரங்களுக்கு முன்பு அவள் தனது 150 மாணவர்கள், எகடமியின் பணிப்பாளர், மற்றும் பெற்றோர்களின் பூரண ஒத்துழைப்போடு ஆரம்பித்ததோடு, கலுத்துறை கிளை மாணவர்களும் இதில் இணைந்தகொண்டனர்.மேலும் எதிர்பார்கப்பட்ட ரூ .2 லட்சம் நிதி திரட்டல்களுக்கு மேலதிகமாக பணம் கிடைக்கப்பெற்று ரூ .4 லட்சமாக உயர்ந்தது.

மேலும், 54ஆவது படைப்பிரிவின் பதவி நிலை அதிகாரி-1(இணை) லெப்டினன் கேணல் பத்திய ஜயவீர அவர்களிடம் கையளிக்குமுகமாக நொச்சியாகம பிரதேசத்தில் கடந்த வெள்ளிக்கிழமை 1000 களிமண் பானைகளை கொள்வனவு செய்யத பின்னர்,குறித்த மாணவக் குழு மிகுதி பணத்தினை இராணுவத்தின் 'துருலியா வெனுவென் அப்பி' திட்டத்திற்கு வழங்க தீர்மானித்தனர்.

இறுதியாக லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்கள் வருகைதந்ந மாணவ குழுவிடம் தந்தை ஸ்தானத்தில் இருந்து பேசியதோடு, அவர்களின் தேசிய நனவுக்காகவும், இயற்கையின் ஒரு திட்டத்தை செயல்படுத்துவதற்கான சிந்தனையையும் பாராட்டுமுகமாக அவர்கள் ஒவ்வொருவருக்கும் பாராட்டு நினைவுச் சின்னங்களை தளபதி அலுவலகத்தில் வைத்து புதன்கிழமை (18) ஆம் திகதி வழங்கிவைத்தார். short url link | 『アディダス』に分類された記事一覧