Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

22nd January 2022 15:45:53 Hours

புலனாய்வு படைத் தலைமையகத்தில் நடைபெற்ற நினைவேந்தல் நிகழ்வில் போரில் உயிர்நீத்த வீரர்களுக்கு அஞ்சலி

இராணுவப் புலனாய்வுப் படையணியின் 29வது ஆண்டு பூர்த்தியை முன்னிட்டு போரில் உயிர் நீத்த புலனாய்வு படை வீரர்களுக்கு அம்பலாங்கொட கரந்தெனியவில் அமைந்துள்ள புலனாய்வு படைத் தலைமையகத்தில் இன்று (21) நடைபெற்ற நினைவேந்தல் நிகழ்வின் போது அஞ்சலி செலுத்தப்பட்டது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் இராணுவ தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்கள் கலந்துகொண்டிருந்ததோடு, அவரின் வருகையை தொடர்ந்து நிகழ்வுகள் ஆரம்பிக்கப்பட்டன.

இதன்போது வருகைத் தந்த தளபதிக்கு தலைமையக நுழைவாயிலில் பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை வழங்கப்பட்டதை தொடர்ந்து புலனாய்வு படையணியின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் சுரேஸ் சலே அவர்களினால் சிறப்பு வரவேற்பளிக்கப்பட்டது. இதன்போது தளபதியவர்கள் பிரதான மண்டபத்தில் படையினருக்கு சிறப்புரை நிகழ்த்தினார்.

கோப்ரல்களுக்கான கழகத்தில் நடைபெற்ற நிகழ்வில் அதிகாரிகள் உள்ளடங்களாக 300 க்கும் மேற்பட்ட புலனாய்வு படையினர் சுகாதார வழிகாட்டல்களை பின்பற்றி கலந்துகொண்டிருந்ததோடு, நாட்டிலுள்ள ஏனைய புலனாய்வு படை சிப்பாய்களும் வீடியோ தொழில்நுட்பத்தின் உதவியுடன் நிகழ்வில் பங்குபற்றினர். இதன்போது பிரதம விருந்தினரின் உரையை செவிமடுத்த சகல சிப்பாய்களுக்கும் அவர்களது குடும்பத்தாருக்கும் தளபதியவர்களால் புதுவருட வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.

தளபதியின் உரையின் நிறைவில் நிகழ்விற்கு வருகை தந்த பிரதம விருந்தினருக்கு நன்றி தெரிவித்த புலனாய்வு படைத் தளபதி சிறப்பு நினைவுப் பரிசொன்றையும் வழங்கினார். பின்னர், ஜெனரல் ஷவேந்திர சில்வா தலைமையக வளாகத்தில் இடம்பெற்று வரும் நிர்மாண பணிகளை மேற்பார்வை செய்ததோடு, பணியிடத்திலிருந்த பொறியியல் சிப்பாய்களுடன் எண்ணங்களை பகிர்ந்துகொண்டதுடன் அவர்களுக்கு அறிவுரைகளையும் வழங்கினார். அதனையடுத்து புலனாய்வு படை தளபதியவர்களின் அழைப்பின் பேரில் குழு புகைப்படம் எடுக்கும் நிகழ்வில் கலந்துகொண்ட பிரதம அதிதியால் தனது விஜயத்தின் நினைவம்சமாக நாக மரக்கன்று ஒன்றும் நாட்டி வைக்கப்பட்டது.

அதனையடுத்து தேசிய புலனாய்வு சேவை மற்றும் புலனாய்வு படையணியின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே அவர்களினால் இராணுவ தளபதிக்கு அழைப்பு விடுக்கப்பட்டதை தொடர்ந்து போரில் உயிர் நீத்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக நினைவேந்தல் அணிவகுப்பொன்றும் நிகழ்த்தப்பட்டமை சிறப்பம்சமாகும். அதனையடுத்து தேசிய கீதம், இராணுவப் கீதம் மற்றும் படையணி கீதம் என்பன இசைக்கப்பட்டதை தொடர்ந்து நான்கு பிரிவுகளாக அணிவகுத்திருந்த படையினரால் மத அனுட்டானங்கள் நிகழ்த்தப்பட்ட பின்னர் அஞ்சலி செலுத்துவதற்கான வாத்திய இசைகளுக்கு மரியாதை செலுத்தும் வகையில் படையினர் அணிவகுத்திருந்தனர்.

அதனை தொடர்ந்து பிரதம அதிதியின் பாரியாரும் இராணுவ சேவை வனிதை பிரிவின் தலைவியுமான திருமதி சுஜீவா நெல்சன் அவர்களுடன் நிகழ்வில் பங்குபற்றிய சகலராலும் ஒரு நிமிட மெளன அஞ்சலியும் செலுத்தப்பட்டது. இதன்போது போரில் உயிர்நீத்த 69 போர் வீரர்களும் நினைவுகூறப்பட்டதோடு, பல வருடங்களுக்கு முன்பாக விடுதலைப் புலிகளின் பயங்கரவாத செயற்பாடுகள் உக்கிரமடைந்திருந்த போது மேற்படி வீரர்கள் தாய்நாட்டிற்கான துணிச்சலுடன் மேற்கொண்ட அர்பணிப்புக்களும் மரியாதையுடன் நினைவுகூறப்பட்டன.

ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்கள் நினைவுத்தூபிக்கு முதலாவதாக மலர் அஞ்சலி செலுத்தியதுடன் நினைவுத்தூபியைச் சுற்றி தீபங்கள் ஏற்றி அஞ்சலி செலுத்தினார். அதனை தொடர்ந்து புலனாய்வு படையணியின் முன்னாள் தளபதி மேஜர் ஜெனரல் (ஓய்வு) எஸ்டீ தென்னகோன், புலனாய்வு படையணி படைத் தளபதி மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே , புலனாய்வு படையணியின் நிலையத் தளபதி மேஜர் ஜெனரல் ரொபின் ஜயசூர்ய, புலனாய்வு படையணி பயிற்சி கல்லூரியின் தளபதி பிரிகேடியர் நசீர் மஜித், புலனாய்வு படையணியின் சார்ஜண்ட் மேஜர் மற்றும் போரில் உயிர் நீத்த வீரர்களின் குடும்பத்தாரும் 2009 மே மாதமளவில் விடுதலைப் புலிகளின் இறக்கமற்ற நடவடிக்கைகளுக்கு தன்னலமின்று முகம்கொடுத்து உயிர் நீத்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.

இந்நிகழ்விற்கு வருகைத் தந்திருந்த இராணுவ தளபதி மற்றும் பங்கேற்பாளர்கள் சிலரினால் மங்கள விளக்கு ஏற்றி வைக்கப்பட்டதை தொடர்ந்து நிகழ்வுகள் ஆரம்பமாகின. அதனையடுத்து நினைவேந்தல் தூபிக்கு அருகிலிருந்த படையினர் அணிவகுத்துச் சென்றதை தொடர்ந்து நிகழ்வின் நிறைவம்சமாக இறுதி அஞ்சலிக்கான வாத்தியங்கள் இசைக்கப்பட்டன. அதற்கமைய இராணுவ சம்பிரதாயங்களுக்கமைய நினைவேந்தல் நிகழ்வுகள் நிறைவடைந்தன.

இந்நிகழ்வில் சிரேஷ்ட அதிகாரிகள், இராணுவ புலனாய்வு படையணி சேவை வனிதையர் பிரிவு தலைவி திருமதி மனோரி சலே, இராணுவ சேவை வனிதையர் பிரிவு அதிகாரிகள் மற்றும் சிப்பாய்களும் நிகழ்வில் கலந்துகொண்டனர்.