Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

09th January 2019 20:00:07 Hours

புதிய இராணுவ பதவி நிலை பிரதானியாக மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா நியமிப்பு

இலங்கை இராணுவத்தின் 53 ஆவது பதவி நிலை பிரதானியாக மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்கள் (9) ஆம் திகதி புதன் கிழமை நியமிக்கப்பட்டார். முன்னாள் மேஜர் ஜெனரல் தம்பத் பெர்ணாண்டோ அவர்கள் ஓய்வு பெற்றுச் சென்றதையிட்டு அவருக்கு பதிலாக இவர் நியமிக்கப்பட்டார்.

இவர் இராணுவ நிறைவேற்று பணிப்பாளராகவும் மற்றும் கஜபா படையணியின் படைத் தளபதியாக கடமை வகித்து வந்த நிலையில் இராணுவ சேவையில் 33 வருடங்கள் சேவையாற்றிய பின்பு இராணுவ பதவி நிலை பிரதானியாக பதவியுயர்த்தப்பட்டார்.

நாட்டில் ஏற்பட்டிருந்த கொடிய பயங்கரவாத யுத்தத்தின் போது நாட்டிற்காக பாரிய சேவைகளையாற்றி 2009 ஆம் ஆண்டு சிறப்பு விருதான வீர விக்ரம விபூஷன பதக்கத்தை இவர் பெற்றுக் கொண்டார்.

இவரது சுயவிபரம் கீழ்வருமாறு:

மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா டப்ள்யூடப்ள்யூவி ஆர்டப்ள்யூபி ஆர்எஸ்பி விஎஸ்வி யூஎஸ்பி என்டீசி பிஎஸ்சி அவர்கள் கஜபா படையணியின் படைத் தளபதியாகவும் மற்றும் இராணுவ நிறைவேற்று பணிப்பாளராக கடமை புரிந்து கொண்டிருந்தார். அத்தருணத்தில் இராணுவ பதவி நிலை பிரதானியாக பதவியுயர்த்தப்பட்டார். இவர் இராணுவ நித்திய படையணியில் 1984 ஆம் ஆண்டு 19 ஆவது பயிற்சி இலக்கத்தின் கீழ் இராணுவத்தில் இரண்டாம் தர லெப்டினனாக இணைந்து இராணுவத்தின் உயர் பதவியான மேஜர் ஜெனரல் பதவிக்கு உயர்த்தப்பட்டார். இவர் இராணுவ பயிற்றுவிப்பு அதிகாரியாகவும், பதவி நிலை உத்தியோகத்தர் மற்றும் கட்டளை தளபதி பதவிகளை இராணுவத்தில் மேற்கொண்டுள்ளார். என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.

மேலும் இவர் 2010 ஆம் ஆண்டு தொடக்கம் 2015 ஆம் ஆண்டு வரை அமெரிக்காவிலுள்ள இலங்கை தூதரகத்தின் தூதுவராக கடமை வகித்தார்.

அச்சமயத்தில் சமூக, மனிதாபிமான மற்றும் கலாசார விவகாரங்களுக்கான ஐக்கிய நாடுகளின் குழுவிற்கும் இலங்கை பிரதிநிதிகளின் ஆலோசகராகவும் இவர் பதவி வகித்துள்ளார். மேலும் 66 வது, 67 வது, 68 வது மற்றும் 69 வது ஐக்கிய நாடுகளின் பொதுச் சபைக்கு மகாநாட்டிற்கு உத்தியோகபூர்வமாக இவர் பங்கேற்றிக் கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்

இவர் காலாட் படையணி அதிகாரியாக இராணுவத்தில் இணைந்து கட்டளை அதிகாரிகளாகவும், 1987 ஆம் ஆண்டு முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர் ஜயவர்தன அவர்களது ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவிலும் கடமை வகித்துள்ளார்.

இறுதியாக இடம்பெற்ற மனிதாபிமான நடவடிக்கைகளின் போது 58 ஆவது படைப் பிரிவிற்கு படைத் தளபதியாகவும் எயார் மொபைல் பிரிக்கட்டிற்கும் கட்டளை அதிகாரியாகவும் சிறந்த சேவையை நாட்டிற்காக ஆற்றினார்.

மேலும் இவர் இராணுவ செயலக பிரிவில் பதவி நிவை உத்தியோகத்தராகவும், திட்டமிடல் பணியகம், பயிற்சி பணியகம், யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகம், இராணுவ தலைமையக பொது நிரவாக பணியகத்திலும், பதவி நிலை உத்தியோகத்தராக கொமாண்டொ படையணியின் கட்டளை தளபதியாகவும், கடமை வகித்துள்ளார்.

இவர் இராணுவ கெடெற் இலக்கம் 37 இல் கீழ் பயிற்சிகளை மேற்கொள்ள வந்த வெளிநாட்டு இராணுவ அதிகாரிகளுக்கும்

கெடெற் பயிற்றுவிப்பாளர் அதிகாரியாக கடமை வகித்துள்ளார். மேலும் இராணுவத்தில் ஆற்றிய பாரிய சேவையின் நிமித்தம் இவருக்கு டப்ள்யூடப்ள்யூவி, ஆர்டப்ள்யூபி, ஆர்எஸ்பி பதக்க விருதுகள் கிடைக்கப் பெற்றுள்ளது.

இவர் அமெரிக்கா, இஸ்ரேல்,நெதர்லாந்து, கிரீஷ், இத்தாலி, பிரான்ஸ், பாகிஸ்தான் நாடுகளில் இராணுவ பயிற்சிகளை பெற்றுள்ளார்.

அத்துடன் அமெரிக்க ஹார்வட் பல்கலைக்கழகம், எம்எஸ்சி பாதுகாப்பு பட்டதாரி மற்றும் மனித உரிமைக் நீதிப் கற்கை நெறிகளை மேற்கொண்டுள்ளார்.

மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்களினால் "2600 ஆண்டுகளுக்குப் பின்னர் இலங்கையின் அடையாளம்" என்ற தலைப்பில் பிரசுரிக்கப்பட்ட புத்தகத்தையும் இவர் வெளியிட்டுள்ளார்.

மேலும் இவர் “ஶ்ரீ லய்கேஷ்வர அபராத மெஹேயும் விஷாரத ஜோதிகதாய வீரபர்தாப தேசமான்ய ஜாதிக கௌரவநாம சம்மான உபாதி சனஸ் பத்ராய” மற்றும் “ வீர கஜேந்திர சங்ராமசுரி ஜாதிக குணவனம சனஸ்பத்ரய மற்றும் வீரவிக்ரம தேசபிமானி விஷ்வ கீர்த்தி ஶ்ரீ ரணசூர”, மெடிரட அபிமானய போன்ற விருதுகளையும், இராணுவ கொக்கி சங்கத்தின் தலைவராகவும் பதவி வகித்துள்ளார்.

இவர் மாத்தளை புனித தோமஸ் கல்லூரியில் தனது கல்வியையும் கற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும். url clone | Nike Shoes