Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

13th November 2019 09:40:04 Hours

புதிய இராணுவ தலைமையகத்தில் இராணுவ தளபதியவர்களால் கொடியேற்றப்பட்டு சைக்கில் சவாரி பயணம் ஆரம்பிக்கப்பட்டது

ஸ்ரீ ஜயவர்தனபுரயில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட இராணுவ தலைமையகத்தின் தொடக்க நிகழ்வுடன் 53 ஆவது பிரிவு தலைமையகத்தினரின் ஒழுங்கமைப்பில் நூற்றுக்கணக்கான சைக்கில;;களுடன; இராணுவத்தின் சைக்கில் சவாரி பயணம் (9) ஆம் திகதி காலை இராணுவ தலைமையகத்தில் ஆரம்பிக்கப்பட்டு பயணத்தைத் தொடங்கியது. இந்த பயணம் 'ஸ்ரீ பாத' சிகரம் வரை இரண்டு நாட்களுக்குள் சுமார் 98 கி.மீ. வரை செல்லவுள்ளது.

இந்த சவாரி சுற்றுப்பயண நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்ட இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்கள் கொடியசைத்து உற்சாகம் மற்றும் வாழ்த்துக்களுடன் நிகழ்வை ஆரம்பித்து வைத்தார். இந்த திட்டமானது அனைத்து படையினர்களின் மன உறுதியையும், சகிப்புத்தன்மையையும், உடல் ஆரோக்கியத்தையும், ஒற்றுமையையும், ஒத்துழைப்பையும் கட்டியெழுப்புவதற்கhக, 53 ஆவது படைப் பிரிவின் கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் ஜயசாந்த கமகே அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் நூற்றுக்கணக்கான ரசிகர்கள் வழங்கிய மிகுந்த ஆர்வத்துடனும் ஸ்ரீ ஜயவர்தனபுரவில் உள்ள இராணுவ தலைமையகத்தில் ஆரம்பிக்கப்பட்டது.

மேலும் இந்த சைக்கிள் ஓட்டுநர்கள் மலிபோட மற்றும் ஸ்ரீ பாத வரையில் சவாரி செய்வதுடன் இராணுவம் மற்றும் புதிய தலைமையகங்களுக்கு ஆசீர்வாதம் பெறுவதற்கhக இந்த பயணத்தை மேற் கொண்டுள்ளனர். அதன்படி இராணுவத் தளபதியின் வருகையின் பின்னர் இராணுவ மற்றும் 53 ஆவது படைப் பிரிவு கொடிகள் அடையாளம் காட்டபட்டதை தொடர்ந்து பயணம் வளாகத்தில் இருந்து ஆரம்பிக்கப்பட்டன. இவர்கள் கொஸ்கம, தெரனியாகல மற்றும் மலிபொட வரை சைக்கில் சவாரி செய்து, அங்கிருந்து கால்நடையாக ஸ்ரீ பாதமலைக்கு செல்வார்கள் என்பது குறிப்பிடதக்க விடயமாகும் Running Sneakers Store | balerínky