Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

20th May 2019 13:47:43 Hours

பிரான்ஸ் பிரதி பாதுகாப்பு இணைப்பாளர் இராணுவ தளபதியை சந்திப்பு

இலங்கைக்கான பிரான்ஸ் தூதரகத்தின் கடற்படையைச் சேர்ந்த பிரதி பாதுகாப்பு இணைப்பு அதிகாரி லெப்டினன்ட் கொமாண்டர் பிலிப் க்ரூஸென்மயர் அவர்கள் இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக அவர்களை இராணுவ தலைமையகத்தில் இம் மாதம் (21) ஆம் திகதி சந்தித்தார்.

இவர்கள் இருவரது இச்சந்திப்பின் போது தற்போதைய பாதுகாப்புக் நிலைமைகள் மற்றும் பிற பொது விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது. இறுதியில் இராணுவ தளபதியினால் வருகை தந்த பிரான்ஸ் தூதரகத்தின் இணைப்பதிகாரிக்கு நினைவுச் சின்னம் ஒன்று வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டது.

இச்சந்தர்ப்பத்தில் இராணுவ பயிற்சி பணிப்பாளர் மேஜர் ஜெனரல் டி எஸ் பஸ்நாயக, விஷேட படையணியின் பிரிக்கட் படைத் தளபதி கேர்ணல் விபுல இகலஹே மற்றும் இராணுவ பயிற்சி பணியகத்தின் கேர்ணல் டப்ள்யூ.ஏ.பீ.ஆர் விஜயதாஸ அவர்கள் இணைந்து கொண்டனர். Best Sneakers | nike air jordan lebron 11 blue eyes black people