Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

29th December 2020 18:05:19 Hours

பாரம்பரியங்களை மதித்து ஜெனரல் சவேந்திர சில்வா புனித தந்த தாது , மல்வத்து மற்றும் அஸ்கிரிய பீடங்களின் ஆசீர்வாதங்களை பெற்றார்

தனது அடுத்த நிலையினை பெற்றுக் கொண்ட சில மணிநேரங்களுக்குப் பிறகு, பாதுகாப்புப் பதவி நிலைப் பிரதானியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் சவேந்திர சில்வா தனது மனைவியும் இராணுவ சேவை வனிதையர் பிரிவு தலைவியுமான திருமதி சுஜீவா நெல்சன் உடன் கண்டி ஸ்ரீ தலதா மாலிகையில் இன்று (29) உந்துவப் பௌர்ணமி மத வழிப்பாட்டில் பங்கேற்றார்.

அவரின் அவ்விஜயத்தின் போது 11 வது படைப்பிரிவு தளபதி, ஸ்ரீ தலதா மாலிகையின் தியவதன நிலமை திரு நிலங்க தேல பண்டார புனித வளாகத்தின் அதிகாரிகள் மல்லிகை பூ தட்டு கொடுத்து வரவேற்றனர். வழிப்பாட்டின் பின்னர் ஜெனரல் சவேந்திர சில்வா தியவதன நிலமை அலுவலகத்திற்கு அழைக்கப்பட்டார் அங்கு ஜெனரலின் புதிய நான்கு நட்சத்திர ஜெனரல் நிலை உயர்வின் பின்னர் அங்கு வருகை தந்தமையியையொட்டி சிறப்பு நினைவு பரிசு வழங்கப்பட்டது. அதன் போது நெல்லிகலை சர்வதேச பௌத்த மையத்தின் தலைமை தேரர் வணக்கத்திற்குரிய வதுரகும்புரே தம்மரத்ன தேரோவும் கலந்துக்கொண்டார்.

அதனை தொடர்ந்து ஜெனரல் சவேந்திர சில்வா புராதன அஸ்கிரி மகா விகாரை (கெடிகே விகாரை) யை வழிப்பட்டு அஸ்கிரிய பீடத்தின் தலைமை தேரர் அதி வணக்கத்திற்குரிய வரகாகொட ஸ்ரீ ஞானரத்ண மகா தேரரை சந்தித்து ஆசீர்வாதம்பெற்றுக்கொண்டார். அதன்பிறகு, ஜெனரல் சவேந்திர சில்வா மல்வத்து பீடத்தின் தலைமை தேரர் அதி வணக்கத்திற்குரிய திப்போட்டுவாவே ஸ்ரீ சுமங்கல தேரரை சந்தித்து சந்தித்து ஆசீர்வாதம் பெற்றுக்கொண்டார்.

இச்சந்திப்பின் போது ஜெனரல் ஷவேந்திர சில்வாவின் கொவிட் 19 தொற்றுநோய் பரவலை தடுப்பதற்கான தொடர்ச்சியான செயற்பாடுகள் மற்றும் மேலும் நாடு முழுவதுமான பல்வேறு தேசத்தின் அபிவிருத்தி பணிகளின் பங்களிப்புதொடர்பான முக்கியமான கருத்து பரிமாற்றிக் கொண்டனர்.

பின்னர் ஜெனரல் சவேந்திர சில்வா வணக்கத்திற்குரிய கலாநிதி நியன்கொட விஜிதசிரி பிரதி தலைமை தேரர், வணக்கத்திற்குரிய திவுல்கும்புரே ஸ்ரீ விமலதம்ம பிரதி தலைமை தேரர் மற்றும் வணக்கத்திற்குரிய வெண்டருவே உபாலி அன்யு தலைமை தேரர் ஆகியோரினை அவர்களது மடங்களுக்கு ஆசீர்வாதங்களை பெற்றுக்கொண்டனர். அங்கு அவர்கள் அவரது பன்முக பாத்திரங்களை பாராட்டினர்.Authentic Sneakers | Nike