Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

01st December 2022 17:52:12 Hours

பாதுகாப்பு சேவை கட்டளை மற்றும் பதவிதாரிகள் கல்லூரியில் இலங்கை இராணுவத்தின் தேசிய பாதுகாப்பு அறிவுகள் தொடர்பான விரிவுரையாளராக தளபதி

சபுகஸ்கந்தை பாதுகாப்பு சேவை கட்டளை மற்றும் பதவிதாரிகள் கல்லூரி இலங்கையில் சர்வதேச ரீதியில் கல்வி கற்கும் இடமாகும். இக் கல்லூரி முப்படை அதிகாரிகளின் கட்டளை மற்றும் பதவி நிலை நுட்பங்களை வழங்குவதுடன் அவர்களின் எதிர்கால நியமனங்கள் மற்றும் சவால்களுக்கு எதிர்கொள்ள அறிவுசார் பண்புகளை மேம்படுத்துகிறது. வியாழன் (01) இராணுவத் தளபதி விக்கும் லியனகே அவர்களினால் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பாதுகாப்பு சேவை கட்டளை மற்றும் பதவிதாரிகள் கல்லூரியின் பாடநெறி இலக்கம்-16ல் இளங்கலை பட்டதாரிகளுக்கு 'தளபதி விரிவுரை' நிகழ்த்தப்பட்டது.

பாதுகாப்பு சேவை கட்டளை மற்றும் பதவிதாரிகள் கல்லூரியின் தளபதி மேஜர் ஜெனரல் பி.கே.ஜி.எம்.எல் ரோட்ரிகோ ஆர்எஸ்பீ பீஎஸ்சி ஐஜி, அவர்களால் வரவேற்பு உரை நிகழ்த்தப்பட்டது. இப் பாடநெறியில் 22 வெளிநாட்டு அதிகாரிகள் உட்பட 149 இளங்கலை பட்டதாரிகள் இராணுவத் தளபதியின் விரிவுரையில் பங்குபற்றினர்.

இராணுவத் தளபதியின் விரிவுரையில் 'தேசிய பாதுகாப்பு தொடர்பான இலங்கை இராணுவத்தின் அறிவு' என்ற தொனிப்பொருளில், 'கடந்த 72 ஆண்டுகளில் இலங்கை இராணுவத்தின் தேசிய பாதுகாப்பின் உற்றுநோக்கல், 'தற்போதைய சிக்கலான பாதுகாப்பு சூழல்', 'பாதுகாப்பு தொடர்பான இராணுவத்தின் பார்வை' ஆகியவற்றின் பரிணாம வளர்ச்சியில் தற்போதைய சூழல்' மற்றும் 'இலங்கை இராணுவத்தின் எதிர்கால திட்டமிடல்', சுதந்திரத்திற்குப் பின்னர், 1971 வரையிலான பாதுகாப்பு மேம்பாடுகள் மற்றும் 1971-1990 வரையிலான காலப்பகுதியில் மனிதாபிமான நடவடிக்கைகளுக்குப் பிந்தைய காலப்பகுதியில், பாரம்பரியமற்ற அச்சுறுத்தல்கள் மற்றும் எதிர்கால சவால்கள் தொடர்பாக உள்ளடக்கப்பட்டிருந்தது.

விரிவுரையின் முடிவில், பாதுகாப்பு சேவை கட்டளை மற்றும் பதவிதாரிகள் கல்லூரியின் இளங்கலைப் பட்டதாரிகளின் கேள்விகள் மற்றும் விளக்கம் மூலம் அதிதியுடன் உரையாடும் வாய்ப்பு கிடைத்தது. நிகழ்வின் முடிவில், அனைத்து இளங்கலை பட்டதாரிகளின் சார்பாக பாதுகாப்பு சேவை கட்டளை மற்றும் பதவிதாரிகள் கல்லூரியின் தளபதியினால் இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே அவர்களுக்கு வருகையின் நினைவாக நினைவுச்சின்னத்தை வழங்கி நன்றி தெரிவிக்கப்பட்டது. அதற்கு பதிலாக பாதுகாப்பு சேவை கட்டளை மற்றும் பதவிதாரிகள் கல்லூரியின் நூலகத்திற்கு நினைவுச் சின்னம் மற்றும் புத்தகப் பொதி இராணுவத் தளபதியினால் வழங்கப்பட்டது.

இராணுவத் தளபதி புறப்படுவதற்கு முன் தனது எண்ணங்களையும் பாராட்டுகளையும் பாதுகாப்பு சேவை கட்டளை மற்றும் பதவிதாரிகள் கல்லூரியின் விருந்தினர் புத்தகத்தில் பதிவிட்டார்.

பாதுகாப்பு சேவை கட்டளை மற்றும் பதவிதாரிகள் கல்லூரியின் பாடநெறி இலக்கம் -16, பங்களதேஷ், இந்தியா, இந்தோனேசியா, மாலைதீவுகள், நேபாளம், ஓமான், பாகிஸ்தான், ருவாண்டா, சவுதி அரேபியா, செனகல் மற்றும் சாம்பியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த 22 வெளிநாட்டவர்கள் உட்பட 149 இளங்கலை பட்டதாரிகள் பயிற்சி பெறுவதோடு அவர்களில் 76 இராணுவத்தினரும், 26 கடற்படையினரும் 25 விமானப்படையினரும் 'பீஎஸ்சி' தகுதிக்கான பாடநெறியை பின்பற்றுகின்றனர்.