Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

15th July 2022 16:14:24 Hours

பாதுகாப்பு செயலாளர் மற்றும் இராணுவத் தளபதி காயமடைந்த இராணுவப் வீரர்களின் நலம் விசாரிக்க மருத்துவமனைக்கு விஐயம்

கடந்த இரண்டு வாரங்களலாக தங்கள் உயிருக்கு அச்சுறுத்தல் இருந்தபோதிலும், இராணுவ வீரர்கள் தங்கள் சவாலான கடமைகளை ஆற்றுவதில் காட்டிய அர்ப்பணிப்புக்கு அதிக முக்கியத்துவம் மற்றும் பாராட்டுக்களை அளித்து பாராளுமன்ற வளாகத்தைச் சுற்றி அண்மையில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களில் காயமடைந்த இராணுவ வீரர்களை நலம் விசாரிப்பதற்காக பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன (ஓய்வு), இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆகியோர் இன்று (15) காலை கொழும்பு இராணுவ வைத்தியசாலைக்கு விஜயம் மேற்கொண்டனர்.

இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே அவர்களுடன் இணைந்து சுகாதார சேவைகள் பணிப்பாளர் பிரிகேடியர் கிரிஷாந்த பெர்னாண்டோ மற்றும் கொழும்பு இராணுவ வைத்தியசாலையின் பராமரிப்பு மற்றும் முகாமைத்துவ பணிப்பாளர் பிரிகேடியர் ஜூட் பெரேரா ஆகியோர் வருகை தந்த பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்னவை (ஓய்வு) கொழும்பு இராணுவ மருத்துவமனை நுழைவாயிலில் வரவேற்றனர்.

பாதுகாப்புச் செயலாளர் மற்றும் இராணுவத் தளபதி இருவரும் அதன் பின்னர் காயமடைந்த இராணுவ வீரர்களுக்கு மருத்துவ சிகிச்சை வழங்கும் விடுதிகளுக்குச் சென்றனர். அவர்களிடம் பேசிய ஜெனரல் கமல் குணரத்ன (ஓய்வு) அவர்களின் காயத்தின் தன்மை மற்றும் உடல்நிலை முன்னேற்றங்கள் மற்றும் குணப்படுத்தும் செயல்முறைகள் குறித்து விசாரித்தார்.

"உங்கள் கட்டளைக்குக் கீழ்ப்படிதல் மற்றும் அயராத கடமைப் பொறுப்பிற்கு உங்கள் வாழ்க்கையைச் செலவழித்து சமூகத்தில் சட்டம் ஒழுங்கை மீட்டெடுக்க பெரிதும் உதவியது என்பதில் சந்தேகமில்லை, அத்தகைய உயரிய அர்ப்பணிப்புப் செயல்களை உங்களைப் போன்ற ஒழுக்கமான வீரர்களால் மட்டுமே செய்ய முடியும் என்பது கடந்த இரண்டு வாரங்களில் தெளிவாக நிரூபிக்கப்பட்டுள்ளது” என்று ஜெனரல் கமல் குணரத்ன (ஓய்வு) சிகிச்சைப் பெறும் இரண்டு காயமடைந்த இராணுவ வீரர்களிடம் கூறினார்.

பின்னர் ஜெனரல் கமல் குணரத்ன (ஓய்வு) அவர்கள் மற்றும் லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே அவர்களுடன் ஒவ்வொருவரையும் வார்டில் சந்தித்து அவர்கள் விரைவில் குணமடைய வாழ்த்தியதுடன், காயமடைந்த இராணுவ வீரர்களின் தேவைகளைக் கவனிப்பதற்காக மருத்துவ அதிகாரிகளுக்கு தனது எண்ணங்களை பகிர்ந்தார்.