Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

02nd January 2020 11:15:25 Hours

பதில் பாதுகாப்பு தலைமை பிரதானியாக இராணுவ தளபதி பதவியேற்பு

இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்கள் பதில் பாதுகாப்பு தலைமை பிரதானியாக இன்று காலை (2) ஆம் திகதி இராணுவ சம்பிரதாய முறைப்படி சர்வதேச பண்டாரநாயக ஞாபகார்த்த மண்டப வளாகத்தினுள் உள்ள அலுவலக வளாகத்தினுள் தனது புதிய பதவியை பொறுப்பேற்றார்.

பாதுகாப்பு தலைமை பிரதானி அலுவலகத்திற்கு வருகை தந்த பதில் பாதுகாப்பு பிரதானியை விமானப்படை, கடற்படைத் தளபதிகள் மற்றும் பதில் பொலிஸ் மா அதிபர் வரவேற்றனர். பின்பு முப்படையினரால் கௌரவ அணிவகுப்பு மரியாதைகள் வழங்கி மேஜர் ஜெனரல் பூரக செனவிரத்ன அவர்களின் தலைமையில் வழங்கி வைக்கப்பட்டன.

பின்பு அலுவலகத்திற்கு வருகை தந்த புதிய பதில் பாதுகாப்பு தலைமை பிரதானியவர்கள் அனைத்து சமய அனுஷ்டான ஆசிர்வாதங்களின் பின்பு தனது புதிய பதவியை பொறுப்பேற்றார். பின்பு பிரமுகர்களின் வருகையை முன்னிட்டு கையொப்பமிடும் புத்தகத்திலும் கையொப்பமிட்டார்.

இந்த நிகழ்வில் இராணுவ தொண்டர் படையணியின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் ஜகத் குணவர்தன, மேற்கு பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த முதலிகே, உபகரன மாஸ்டர் ஜெனரல் M.A.A.D ஶ்ரீநாக, போர்கருவி பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் C.M.D.P சந்திரசேகர, இராணுவ செயலாளர் நாயகம் P.J கமகே மற்றும் முப்படை அதிகாரிகள் பங்கேற்றிக் கொண்டனர். latest Running | nike air barkley posite 76ers shoes for women Maximum Volume DJ4633-010 Release Date - SBD