Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

01st July 2022 09:27:52 Hours

படையணிகளுக்கிடையிலான வலைப்பந்து சாம்பியன்ஷிப் - 2022 இறுதிப் போட்டியில் இலங்கை இராணுவ மகளிர் படையணி ‘ஏ’ அணி வெற்றி

பனாகொட இராணுவ உள்ளக விளையாட்டரங்கில் படையணிகளுக்கிடையிலான வலைப்பந்து சாம்பியன்ஷிப் - 2022 போட்டி தொடரின் வியாழன் மாலை (30) நடைப்பெற்ற இறுதிப் போட்டியில் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே அவர்கள் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார். இப்போட்டியானது ஏழு அணிகளின் பங்கேற்புடன் 22 ஜூன் 2022 முதல் ஜூன் 30, 2022 வரை நடைபெற்றது.

பிரதான நுழைவாயிலில், இராணுவ வலைப்பந்தாட்டக் குழுவின் தலைவர் பிரிகேடியர் சி.எஸ்.திப்போதுகே அவர்களினால் இராணுவத் தளபதி வரவேற்கப்பட்டதுடன், இறுதிப் போட்டியாளர்கள் இராணுவ தளபதிக்கு அறிமுகப்படுத்தப்படுவதற்கு முன்னர் மேடைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

இறுதிப் போட்டியில் இலங்கை இராணுவ மகளிர் ஏ அணி மற்றும் B அணிகள் போட்டியிட்டனர். இலங்கை இராணுவ மகளிர் 'A' அணி வீராங்கனைகள் 21/15 என்ற கணக்கில் வெற்றி பெற்று இந்த ஆண்டுக்கான சாம்பியன்ஷிப்க்கு தகுதி பெற்றனர்.

இறுதியில், இராணுவத் தளபதி மற்றும் இராணுவ சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி ஜானகி லியனகே ஆகியோர் இணைந்து சகல பிரிவுகளிலும் வெற்றி பெற்றவர்களுக்கான வெற்றிக்கிண்ணங்களை வழங்கிவைத்தனர்

வெற்றி பெற்ற அணிகள் பின்வருமாறு:

சம்பியன்ஷிப் - இலங்கை இராணுவ மகளிர் படையணி ‘ஏ’ அணி

இரண்டாம் இடம் - இலங்கை இராணுவ மகளிர் படையணி ‘பி’ அணி

மூன்றாம் இடம் - இலங்கை இராணுவ சமிக்ஞை படையணி

பதவி நிலை பிரதானி மேஜர் ஜெனரல் ஜகத் கொடித்துவக்கு, பிரதி பதவி நிலை பிரதானி மேஜர் ஜெனரல் சன்ன வீரசூரிய, இலங்கை இராணுவத் தொண்டர் படையணியின் தளபதி மேஜர் ஜெனரல் சுஜீவ செனரத் யாப்பா, மேற்கு பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் தீபால் புஸ்ஸல்ல, சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகளின் துனைவிகள். மற்றும் சிப்பாய்கள் இப்போட்டியை நேரில் கண்டுகளித்தனர்.