Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

23rd November 2022 16:21:58 Hours

படையணிகளுக்கிடையிலான காற்பந்து சம்பியன்ஷிப் – 2022 இன் வெற்றி இலங்கை இராணுவ சேவைப் படையணிக்கு

உலக கால்பந்து ரசிகர்கள் கால்பந்து உலகக் கோப்பை (பிபா)எங்கும் பார்க்க ஆர்வமாக உள்ள நிலையில், இந்த ஆண்டு ஜனவரி மாதம் தொடங்கிய இராணுவப் படையணிகளுக்கு இடையிலான கால்பந்து சம்பியன்ஷிப் - 2022 போட்டி, செவ்வாய்க்கிழமை (22) பிற்பகல் கொழும்பு ரேஸ் கோர்ஸ் மைதானத்தில் புதியவர்களுக்கு ஊக்கமளிக்கும் வகையில் நிறைவிற்கு வந்தது.

இலங்கை இராணுவ சேவைப் படையணி மற்றும் இலங்கை இராணுவ பொது சேவைப் படையணிகளுக்கு இடையிலான இறுதிப் போட்டிக்கு முன்னர் 17 கால்பந்து அணிகள் படையணிகளின் மட்டங்களில் போட்டியில் பங்கு பற்றினர்.

இறுதிப் போட்டிக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில், இராணுவத் தளபதியின் சார்பாக பிரதம அதிதியாக இராணுவ பதவி நிலைப் பிரதானி மேஜர் ஜெனரல் ஜகத் கொடித்துவக்கு, பிரதிப் பதவி நிலைப் பிரதானி மேஜர் ஜெனரல் சன்ன வீரசூரிய, இலங்கை இராணுவத் தொண்டர் படையின் தளபதி மேஜர் ஜெனரல் சுஜீவ செனரத் யாப்பா ஆகியோர் கலந்து கொண்டனர். இத்துடன் நிறைவேற்று பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் சந்தன விக்கிரமசிங்க மற்றும் பெருந்திரளான உதைபந்தாட்ட ரசிகர்கள் மைதானத்தில் இறுதிப் போட்டிகளைக் கண்டுகளித்தனர்.

இலங்கை இராணுவ பொது சேவைப் படையணி வீரர்களை தோற்கடித்த இலங்கை இராணுவ சேவைப் படையணியின் கால்பந்து அணி, 4-2 கோல்கள் என்ற அடிப்படையில் படையணிகளுக்கான கால்பந்து சம்பியன்ஷிப் போட்டி - 2022 இல் சம்பியனாகியது.

இறுதிப் போட்டியின் பின்னர் அன்றைய பிரதம விருந்தினர், வருகை தந்த வேறு சில சிரேஷ்ட அதிகாரிகளுடன் இணைந்து வெற்றி பெற்ற அணிகள் மற்றும் சாதனையாளர்களுக்கு விருதுகள், கிண்ணங்கள் மற்றும் சான்றிதழ்களை வழங்கினார்.

போட்டியின் சிறந்த வீரருக்கான விருது இலங்கை இராணுவ சேவைப் படையணியின் குழுவின் பணிநிலை சார்ஜன்ட் எச்.டி.எம் சில்வா அவர்களுக்கும் சிறந்த கோல் காப்பாளர் விருதினை இலங்கை இராணுவ சேவைப் படையணி குழுவின் சிப்பாய் எம்.ஏ.என் கிம்ஹான அவர்களுக்கும் வழங்கப்பட்டது.

இலங்கை இராணுவக் கால்பந்தாட்டக் குழுவின் தலைவரும் ஆளனி நிர்வாக பணிப்பகத்தின் பணிப்பாளருமான பிரிகேடியர் உபுல் கொடித்துவக்கு அவர்களின் தலைமையில் விளையாட்டுப் பணிப்பக அலுவலகத்துடன் கலந்தாலோசித்து போட்டி மற்றும் இறுதிப் போட்டிகளை நடத்துவதில் முக்கிய பங்காற்றினர்.