Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

05th January 2022 20:46:44 Hours

பங்குதாரர்கள் மற்றும் நிபுணர்களுடன் சேதன பசளை உற்பத்திக்கான பசுமை விவசாய செயற்பாட்டு மையத்தின் தேசிய வேலை திட்டம் 2022 ஆரம்பிப்பு

ஜனாதிபதியின் உத்தரவின் பேரில் நாடளாவிய ரீதியில் சேதன பசளை உற்பத்தியை முன்னெடுத்து, நடைமுறைப்படுத்த மற்றும் ஒருங்கிணைக்க ராஜகிரியவில் உறுவாக்கப்பட்ட பசுமை விவசாய செயற்பாட்டு மையத்தின் முதலாவது அமர்வு இன்று (5) பிற்பகல் ஆரம்பமானது.

இந்த அமர்வில் பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் இராணுவத் தளபதியும் பசுமை விவசாய நடவடிக்கை மையத்தின் தலைவருமான ஜெனரல் ஷவேந்திர சில்வா கலந்து கொண்டதுடன் பங்குதாரர்களின் உயர்மட்ட குழு மற்றும் இது தொடர்பான நிபுணர்களும் கலந்து கொண்டனர்.

பசுமை விவசாய செயற்பாட்டு மையத்தின் தலைவர் ஜெனரல் சவேந்திர சில்வா மற்றும் விவசாய அமைச்சின் செயலாளர் திரு. டி.எம்.எல்.டி. பண்டாரநாயக்க, விவசாய இராஜாங்க அமைச்சின் செயலாளர் திரு. எம்.என். ரணசிங்க ஆகியோர் இணைந்து பசுமை விவசாய செயற்பாட்டு மையத்தின் முதல் அமர்வின் நோக்கம் குறித்து விளக்கினர்.

விவசாயப் பணிப்பாளர் நாயகம் கலாநிதி எஸ்.எச்.எஸ். அஜந்த டி சில்வா, விவசாய அபிவிருத்தி ஆணையாளர் நாயகம் திரு. ஏ.எச்.எம்.எல். அபேரத்ன,விவசாய அமைச்சின் பசுமை விவசாய ஆலோசகர்/ நிபுணர் கலாநிதி ஹேமந்த விஜேவர்தன,தேசிய உர செயலக பணிப்பாளர் திரு. சந்தன லொகுஹேவகே, ஜனாதிபதி செயலணியின் (PTF) தலைவர் மேஜர்(ஓய்வு) விஜித வெலிகல, ஜனாதிபதி செயலணியின் செயலாளர் திரு. ஜி.என்.வெர்ணன் பெரேரா, ஜனாதிபதி செயலணியின் உயிரியல் வேளாண்மை ,விஞ்ஞானி டொக்டர் கசுன் தாரக அமல், லங்கா உரக் கம்பனியின் முகாமைத்துவப் பணிப்பாளர் திரு.ஆர்.ஏ.பிரியந்த பெரேரா, கொழும்பு வர்த்தக உர நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் கலாநிதி ஜெயந்த வீரரத்ன, பொருளாதார மற்றும் விவசாய முறைமை நிபுணருமான கலாநிதி பேட்ரிக் நுகவெல, இலங்கை பசுமை விவசாய நடவடிக்கை தலைவர் திரு. திலக் காரியவசம், ஆராச்சியாளர் & விவசாயத் தகவல் விஞ்ஞானி திரு. ஜே.எம். சூரசேன, ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் சஞ்சீவானி ஜினிகதர , ரஜரட்ட பல்கலைக்கழக தற்காலிக விரிவுரையாளரும் ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாய அமைப்பின் ஆலோசகருமான கலாநிதி பி.பி.தரமசேன ஆகியோர் பசுமை விவசாய செயற்பாட்டு மையத்தில் நடந்த இந்த தொடக்க நிகழ்வில் கலந்து கொண்டனர்.

2021 டிசம்பர் 2 ஆம் திகதி விவசாய செயற்பாட்டு மையம் ஸ்தாபிக்கப்பட்டு அதன் தலைவராக அதிமேதகு ஜனாதிபதியினால் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்கள் நியமிக்கப்பட்ட பின்னர் அவரின் தலைமையில் நடைபெற்ற குறித்த விரிவான கலந்துரையாடலில் சேதன பசளை மற்றும் திரவ உரங்களைத் தீர்மானிப்பதற்கான சாத்தியக்கூறுகள், பாஸ்பரஸ் சேர்ப்பதன் அவசியம், யால பருவத்துக்கான முட்டை விதைகள் உற்பத்தி, நனோ நைட்ரஜன் மற்றும் கேசிஎல் உரங்களின் பயன்பாடு, உற்பத்தி செய்யப்பட்ட உரத்திற்கான தர சோதனைகள், களைகள் மற்றும் பூச்சிக்கொல்லிகளுக்கு மாற்று வேளாண் இரசாயனங்களின் பயன்பாடு, இராணுவம், சிவில் பாதுகாப்பு திணைக்களம் மற்றும் நிலச் சீர்திருத்த ஆணையம் ஆகியவற்றின் செறிவூட்டல் - ஏற்கனவே உற்பத்தி செய்யப்பட்ட கரிம உரப் பங்குகள், 2022 யால பருவத்தில் நெற் செய்கைக்கான மூலோபாய வழிகாட்டுதல்களை வழங்குதல், மற்ற பயிர்கள் மற்றும் பயிர்ச்செய்கைகளுக்கு சேதன பசளை மற்றும் திரவ உரங்கள் வழங்கல் மற்றும் தேவை, விவசாய அதிகாரிகள் மற்றும் விவசாய சமூகங்களுக்கு சேதன பசளைகளை பயன்படுத்துவது பற்றிய அறிவையும் பயிற்சியையும் மேம்படுத்துதல், நீண்ட கால மூலப்பொருட்கள் மற்றும் உற்பத்தி செயல்முறைக்கு ஆதாரங்களை வழங்கக்கூடிய திட்டங்கள் போன்ற விடயங்கள் முன்வைக்கப்பட்டன.

எதிர்வரும் யால பருவத்தில் சேதன பசளைகளை பயன்படுத்துவது தொடர்பான மூலோபாய திட்டங்களும் கூட்டத்தில் அதிகமாக பரிசீலிக்கப்பட்டதுடன் அதற்கான கடுமையான வழிகாட்டுதல்களுடன் திரவ மற்றும் ஏனைய பொருட்களை கருத்தில் கொண்டு இரண்டு தீர்வுகள் முன்வைக்கப்பட்டது. அதேபோன்று, அனைத்து பங்குதாரர்களும் திரவ மற்றும் கரியமில பாஸ்பேட்டின் பயன்பாட்டிற்கு இணையாக பசுமை விவசாயக் கருத்தாக்கத்துடன் 2022 யால பருவத்திற்கு தேவையான முழு அளவிலான உரங்களின் உற்பத்தி தொடர்பான நடைமுறை அம்சங்களை ஆராய்ந்தனர்.

நனோ-நைட்ரஜன் திரவ உரங்கள், களைக்கொல்லிகள் மற்றும் பூச்சிக்கொல்லிகள் மற்றும் அவற்றின் தேவைகள், உயர் தரத்திற்காக ஏற்கனவே தயாரிக்கப்பட்ட சேதன பசளை இருப்புகளை செறிவூட்டுதல் மற்றும் விரும்பிய இலக்குகளை அடைவதற்கான மூலோபாய சாலை வரைபடத்தை தயாரித்தல் ஆகியவற்றுக்கான தற்போதைய தேவையை 12 முக்கிய பகுதிகளின் கீழ் விரிவான விவாதங்கள் இடம்பெற்றன.

அனைத்து இராணுவத்தின் முகாம்களின் நிலப்பரப்புகளையும் பயன்படுத்தி சேதன பசளை உற்பத்தி திட்டங்களை முன்னெடுப்பதில் முன்னணியில் உள்ள இலங்கை இராணுவம், ஏற்கனவே ஜெனரல் ஷவேந்திர சில்வாவின் வழிகாட்டுதலின் பேரில் தேசிய ஊக்குவிப்பு திட்டங்களுக்கு பங்களித்துள்ளதுடன் எதிர் வரும் மாதங்களில் உற்பத்தி செயல்முறையை பெருக்கி விரைவுபடுத்த எதிர்பார்க்கிறது.

முன்னதாக, கொவிட்-19 பரவலைத் தடுப்பதற்கான தேசிய செயற்பாட்டு மையத்தின் தலைவராக செயற்பட்ட ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் கொவிட்-19 தொற்றைக் கட்டுப்படுத்தும் பணிகளில் இலங்கை இராணுவம் ஈடுபட்டுள்ளதுடன் அதிமேதகு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் வழிகாட்டுதலின் அவ்மையம் பசுமை விவசாய செயற்பாட்டு மையமாக செயற்படுகிறது என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.