Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

22nd August 2020 20:40:37 Hours

நாட்டிற்காக உயிர் தியாகம் செய்த சிங்க படையணி வீரர்களை நினைவுபடுத்தும் கௌரவ நிகழ்வு

இலங்கை இராணுவத்தில் மிகவும் போர்க்குணமிக்க படையணியாக சிங்கப் படையணி விளங்குகின்றது. 2009 ஆம் ஆண்டிற்கு முன்னர் இந்த படையணியில் நாட்டிற்காக உயிர் தியாகம் செய்த 143 அதிகாரிகள் மற்றும் 3719 படை வீரர்களை நினைவு படுத்தும் முகமாக மேற்கொள்ளப்பட்ட 28 ஆவது ஆண்டு நிறைவு நிகழ்வானது இம் மாதம் (22) ஆம் திகதி அம்பேபுஸ்சையில் அமைந்துள்ள சிங்கப் படையணி தலைமையகத்தில் இடம்பெற்றது.

இந்த நிகழ்விற்கு சிங்கப் படையணியின் படைத் தளபதியின் அழைப்பையேற்று பிரதம அதிதியாக கோவிட் - 19 மைய தலைவரும், பாதுகாப்பு பதவிநிலை பிரதானி மற்றும் இராணுவ தளபதியுமான லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்கள் வருகை தந்தார். இவரை சிங்கப் படையணியின் படைத் தளபதியும் மற்றும் மேற்கு பாதுகாப்பு படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் ஜயந்த செனெவிரத்தன அவர்கள் வரவேற்றார்.

இராணுவ தளபதியவர்களை நுழைவாயிலில் வைத்து சிங்கப் படையணியினர் இராணுவ சம்பிரதாய முறைப்படி அணிவகுப்பு மரியாதைகள் வழங்கி வைத்து வரவேற்றனர். பின்னர் இராணுவ தளபதி அவர்கள் தலைமையக வளாகத்தினுள் மரநடுகைகளை மேற்கொண்டு பின் தலைமையகத்தினுள் அமைந்துள்ள இராணுவ நினைவு தூபி வளாகத்துக்கு சென்று நாட்டிற்காக உயிர் தியாகம் செய்த படை வீரர்களை நினைவு படுத்தி மலரஞ்சலி செலுத்தினார்.

இந்த நிகழ்வின் ஆரம்பத்தில் இராணுவ மற்றும் படையணி கீதங்கள் இசைக்கப்பட்டு பின்பு நாட்டிற்காக உயிர் நீத்த இராணுவ போர் வீரர்களை நினைவு படுத்தும் முகமாக இரண்டு நிமிட மௌன அஞ்சலிகள் இந்த நினைவு தூபி வளாகத்தினுள் இடம்பெற்றன. இவ்வேளையில் பெற்றோர்கள், பிள்ளைகள் மற்றும் உறவினர்கள் படையணி கொடிகளை ஏந்திய வண்ணம் இச்சந்தர்ப்பத்தில் பங்கேற்றுக் கொண்டார்கள். இதன் போது நாட்டிற்காக உயிர் திறந்த போர் வீரர்களை கௌரவித்து இராணுவ தளபதியவர்கள் உரை நிகழ்த்தினார்.

இந்த உரையின் போது இராணுவ தளபதியவர்கள் சிங்கப் படையணியினால் இராணுவத்திற்கு ஆற்றிய அளப்பெரிய சேவையை குறிப்பிட்டார். அத்துடன் இராணுவ தளபதியாகிய நான் கடந்த காலத்தில் 58 ஆவது படைப் பிரிவிற்கு படைத் தளபதியாக கடமை வகித்த சந்தர்ப்பத்தில் சிங்கப் படையணியினருடன் நெருக்கமாக பணியாற்றினேன் அச்சந்தர்ப்பத்தில் நாட்டின் இறைமைக்காகவும், சமாதானத்திற்காகவும் இந்த சிங்கப் படையணியைச் சேர்ந்த போர் வீரர்கள் அவயங்கள் மற்றும் உயிர்களை நீத்து துணிச்சலான செயலை மேற்கொண்டதை எவரும் மறக்க கூடாதென்று வலியுறுத்தினார்.

மேலும் துணைவிமார்கள், குழந்தைகள், பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள நாட்டின் பாதுகாப்பின் நிமித்தம் போர்க்களங்களில் கடமைகளில் ஈடுபட்டுக்கொண்டிருந்த சமயத்தில் இவர்களுக்கு தார்மீக உத்வேகத்தை வழங்கி பாரிய ஒத்துழைப்பை வழங்கினீர்கள் இதற்கு உங்களிற்கு நன்றிகளை கூற விரும்புகிறேன்.

பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்தின் போது இராணுவத்தினருக்கு ஏற்பட்ட இழப்புக்களுக்கு உதவியளிக்கும் முகமாக மேன்மை தங்கிய ஜனாதிபதி மற்றும் பிரதமரும் பாதுகாப்பு அமைச்சின் ஊடாக இராணுவ அங்கத்தவர்களுக்கு பாரிய நலன்புரி உதவிகளை வழங்கி வருகின்றனர்.

அத்துடன் இச்சந்தர்ப்பத்தில் நாட்டில் கோவிட் – 19 தொற்று நோயை கட்டுப்படுத்துவதற்கு மேன்மை தங்கிய ஜனாதிபதி அவர்களினால் பாதுகாப்பு படையினர்கள், சுகாதார அதிகாரிகளுக்கு வழங்கிய ஒத்துழைப்பிற்கும் இத்தருணத்தில் நன்றி கூற விரும்புகிறேன்.

மேலும் "கோவிட் -19 தொற்று நோயினால் சிக்கித் தவிக்கும் 7,000 க்கும் மேற்பட்ட இலங்கை வெளிநாட்டவர்கள் ஏற்கனவே இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர் என்பதை நினைவில் கொள்ள வேண்டும், மேலும் வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களின் அபிலாஷைகளை நிறைவேற்றுவதற்கான செயல்முறை இன்னும் தொடர்கிறது. நாங்கள் ஒரு சிறிய நாடு, நாங்கள் அனைவருக்கும் இடமளிக்க முடியாது அவற்றை மொத்தமாக இங்கு கொண்டு வருகிறார்கள். கிடைக்கக்கூடிய தனிமைப்படுத்தப்பட்ட மையங்களின் எண்ணிக்கையைப் பொறுத்து இது சரியான முறையில் செயல் படுத்துவதற்கு இராணுவம் முன்வர வேண்டும். என்று" இராணுவத் தளபதி வலியுறுத்தினார்.

மேன்மை தங்கிய ஜனாதிபதி அவர்களின் எண்ணக்கருவிற்கமைய தேசத்தினை கட்டியெழுப்புவதற்கு எமக்கு சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. இதற்கமைய அபிவிருத்தி பணிகள் நிமித்தம் கட்டிடங்கள், மைதானம், விளையாட்டு வளாகங்கள், சாலைவழிகள் மற்றும் பாடசாலை உள்கட்டமைப்புக்கள் நிர்மாணிக்க இராணுவத்திற்கு பொறுப்புக்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன என்று இராணுவ தளபதி சுட்டிக்காட்டினார்.

பின்னர் இந்த நிகழ்வில் சிங்கப் படையணியின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் ஜயந்த செனெவிரத்ன அவர்கள் வாழ்த்துறைகளை நிகழ்த்தினார். இதன் போது இராணுவ தளபதியின் கண்ணியத்தையும், முக்கியத்துவத்தையும் சிறப்பித்தார். பின்னர் இராணுவ தளபதியுடன் அனைத்து அதிகாரிகளும் குழுப்புகைப்படத்தில் இணைந்து கொண்டனர்.

அதன் பின்பு பௌத்த, கத்தோலிக்க, இந்து மற்றும் இஸ்லாமிய மத வழிபாடுகளுடன் நாட்டிற்காக உயிர் தியாகம் செய்த போர் வீரர்களை நினைவு படுத்தி பிறார்த்தனைகள் இடம்பெற்றன.

இந்த நிகழ்வில் ஓய்வு பெற்ற சிங்கப் படையணியைச் சேர்ந்த உயரதிகாரிகள், சேவையிலுள்ள உயரதிகாரிகள் , படை வீரர்கள் இணைந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும். bridge media | New Balance 327 Moonbeam , Where To Buy , WS327KB , Worldarchitecturefestival