Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

10th September 2021 12:56:55 Hours

நாடு தழுவிய தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் செப்.21 வரை நீடிப்பு

நாடு தழுவிய ரீதியில் அமுல்படுத்தப்பட்டிருந்த தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் திங்கட்கிழமை (13) நீக்கப்படுமென எதிர்பார்த்திருந்த நிலையில் நாட்டில் நிலவும் தொற்று நோய் பரவல் காரணமாக எதிர்வரும் 21 ஆம் திகதி அதிகாலை 4.00 மணி வரையில் நீடிக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் இராணுவ தளபதியும் கொவிட் - 19 பரவல் தடுப்புக்கான தேசிய செயல்பாட்டு மையத்தின் தலைவருமான ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்களினால் இன்று (10) பிற்பகல் அறிவித்தார்.

எவ்வாறாயினும், மருந்தகங்கள், விவசாயம், ஆடை மற்றும் ஏற்றுமதி துறை, பொருளாதார மத்திய நிலையங்கள் போன்ற அத்தியாவசிய சேவைகள் வழமை போன்றே செயல்படும். அதே சமயத்தில் 20 வயதுக்கு மேற்பட்டவர்கள் உள்ளடங்களாக இதுவரை தடுப்பூசி பெறாதவர்களுக்கான தடுப்பூசி வழங்கும் திட்டங்கள் இலங்கை இராணுவம், கடற்படை, விமானப்படை மற்றும் சுகாதாரத் துறையினரால் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வரும் எனவும் தெரிவித்தார்.