Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

29th June 2022 16:09:08 Hours

தேசிய கிரிக்கெட் அணியில் புதிதாக இணைவோருக்கு 513 வது பிரிகேடின் ஏற்பாட்டில் அனுசரணை & ஊக்கத்தொகை

இலங்கை தேசிய கிரிக்கெட் அணியின் 19 வயதுக்குட்பட்ட பெண்கள் பிரிவிற்கு தெரிவான யாழ். சுள்ளிபுரத்தில் வசிக்கும் விக்டோரியா கல்லூரியைச் சேர்ந்த வளர்ந்து வரும் விளையாட்டு வீராங்கனையான கிறிஸ்டினா செல்வராசாவுக்கு, யாழ். பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் 51 வது படைப்பிரிவின் கீழுள்ள 513 வது பிரிகேடினரால் நிதி உதவிகள் வழங்கப்பட்டன.

இவரது சாதனைகள் மற்றும் தேசிய கிரிக்கட் அணிக்கு தெரிவு செய்யப்பட்டமையிட்டு பொருளாதார கஷ்டங்களை கலைந்து எதிர்காலத்திலும் அவர் தொடர்ச்சியாக பயிற்சிகளை முன்னெடுக்க வேண்டும் என்ற நோக்கில் யாழ். பாதுகாப்பு படைத் தலைமையக தளபதியவர்களின் ஆசிர்வாதத்துடன், 51 வது படைப்பிரிவு தளபதி மேஜர் ஜெனரல் உதய குமார அவர்களுடன் இணைந்து, 513 வது பிரிகேட் தளபதி கேணல் ரிஸ்வி ராசிக் ஆகியோரினால் மேற்படி நிதி உதவிகள் ஏற்பாடு செய்து கொடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

அதன்படி, தியாகி அறக்கட்டளையின் திரு மனோகரன் மனோ அவர்களிடத்தில் இராணுவத்தினால் விடுக்கப்பட்ட வேண்டுகோளுக்கு இணங்க, சுவிஸ்லாந்தில் வசிக்கும் தியாகி அறக்கட்டளையின் தலைவர், மெசர்ஸ் வாமதேவன் தியாகேந்திரன் அவர்கள் மேற்படி வீராங்கனைக்கு மாதாந்தம் 5000 ரூபாய் ஊக்குவிப்பு தொகை வழங்க முன்வந்துள்ளார்.

அதன்படி, பெற்றோருடன் அழைப்பிக்கப்பட்டிருந்த குறித்த வீராங்கனைக்கு நிதி உதவிகள் மற்றும் விளையாட்டு உபகரணங்களும் வழங்கி வைக்கப்பட்டன.

அதனையடுத்து, 51 படைப்பிரிவு தலைமையகத்திற்கு அழைப்பிக்கப்பட்டிருந்த மேற்படி வீராங்கனைக்கு தியாகி அறக்கட்டளையின் தலைவரான திரு வாமதேவன் தியாகேந்திரன் மற்றும் 51வது படைப்பிரிவு மேஜர் ஜெனரல் உதய குமார ஆகியோரால் திங்கட்கிழமை (27) நிதி உதவிகள் மற்றும் ஊக்குவிப்புத் தொகைகள் வழங்கப்பட்டிருந்ததோடு, அவரது எதிர்கால முயற்சிகளுக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்தனர்.

இந்நிகழ்வில் 513 வது பிரிகேட் தளபதி கேணல் ரிஸ்வி ராசிக் மற்றும் பயனாளியின் பெற்றோர்களும் கலந்துகொண்டனர்.