Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

07th January 2021 14:50:16 Hours

தேசிய கட்டுமான பணிகளை நோக்கிய வேளாண் மற்றும் கால்நடை பணிப்பகத்தின் புதிய படை ஆரம்பம்

ஜனாதிபதியின் சுபீட்சத்தின் நோக்கு கொள்கைத் திட்டத்திற்கு அமைவாக, தேசத்தைக் கட்டியெழுப்பும் பணிகளில் ஈடுபடுவதனையொட்டி இலங்கை இராணுவம் நாட்டின் விவசாயத் துறையில் ஒரு புதிய திருப்புமுனையை ஏற்படுத்தும் முகமாக , அதன் வேளாண்மை மற்றும் கால்நடைகளுக்கென புதிய படைகளை வியாழக்கிழமை (7) இராணுவ வேளாண்மை மற்றும் கால்நடை பணிப்பகத்தின் கீழ் உருவாக்கியது.

அதன் ஸ்தாபனத்திற்கான முறையான உத்தரவுகளில் பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் , இராணுவத் தளபதியும், கொவிட்-19 பரவலை தடுப்பதற்கான தேசிய செயல்பாட்டு மையத்தின் தலைவருமான ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்கள் கையெழுத்திட்டார். தேசிய உள்கட்டமைப்பு, நகர்ப்புற அழகுபடுத்துதல், மரம் நடவு, புதிய களங்களை தோண்டுவது, பொது பயன்பாடுகளை உருவாக்குதல், பொது மேம்பாடு வசதிகள், சாகுபடிகள், சாலை கட்டுமானங்கள், மாறுபட்ட புதுப்பித்தல் போன்றவை பணிகளை ஏற்கனவே முன்னெடுத்துள்ளதும் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த இந்த முக்கிய களத்தில் எதிர்காலத்தில் அற்புதமான இராணுவ திறன்களை நிரூபிக்க மற்றும் செயல்படுத்தக்கூடியதுமான குறித்த புதிய படையின் பின்னணியில் தளபதி இருந்துள்ளார்.

வேளாண் மற்றும் கால்நடை பணிப்பகம் மற்றும் இலங்கை இராணுவ சேவை படையணியின் தளபதியுமான மேஜர் ஜெனரல் இந்திராஜ் கந்தனஆராச்சி அவர்களின் அழைப்பினை ஏற்று அன்றைய பிரதம விருந்தினராக ஜெனரல் ஷவேந்திர சில்வாவின் வருகையினை தொடர்ந்து , ஸ்ரீ ஜயவர்தனபுர இராணுவ தலைமையகத்தில் புதிய படைப்பிரிவின் பதவியேற்பு தொடர்பான நடவடிக்கைகள் இடம்பெற்றன. குறித்த நடவடிக்கைகளை தொடர்வதற்கான கையொப்பமிடுவதற்கு முன்னர் அன்றைய பிரதம விருந்தினரின் அவதானிப்பிற்காக வேளாண் மற்றும் கால்நடை பணிப்பகத்தின் தற்போதைய திட்டங்களின் சித்திர காட்சி மற்றும் சில மாதிரி மாதிரிகள், நுழைவாயிலில் வைக்கப்பட்டன.

பாரம்பரிய எண்ணெய் விளக்கை ஒளிரச் செய்தல், வேளாண் மற்றும் கால்நடை பணிப்பகத்தின் திட்டமிடப்பட்ட திட்டங்கள் போன்றவற்றின் பங்கு மற்றும் பணிகள் குறித்த வீடியோ ஆவணப்படத்தைத் திரையிடுவது,தேசத்தைக் கட்டியெழுப்பும் பணிகள், விவசாயத் துறையின் வளர்ச்சி மற்றும் புதிய சவால்களைத் தீர்ப்பது போன்றவை இதுவரை செயல்படுத்தப்பட்டு, ஜெனரல் சவேந்திர சில்வாவால் வழிநடத்தல் தொடர்பான விளக்கத்தை கொண்ட மேஜர் ஜெனரல் இந்திராஜித் கந்தனஆராச்சி அவர்களின் வரவேற்பு உரை இடம்பெற்றன. குறித்த திட்டத்தை முன்னெடுப்பதற்கு இராணுவ தளபதியினால் கையெழுத்திட்ட பிறகு, மேஜர் ஜெனரல் கந்தனஆராச்சி அவர்கள் தளபதியின் 'துரு மிதுரு நவ ரத்தக்' திட்டத்தின் கீழ் இதுவரை செயல்படுத்தப்பட்ட தொடர்ச்சியான வேளாண் மற்றும் கால்நடை பணிப்பகத்தின் திட்டங்களை உள்ளடக்கிய ஒரு கையேட்டின் நகல்களை இராணுவத் தளபதி மற்றும் ஏனைய அழைப்பாளர்களுக்கு வழங்கினார்.

அன்றைய பிரதம விருந்தினரான ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்கள் தனது சுருக்கமான உரையில், ஆயுதப்படைகளில் முழு நம்பிக்கையையும் வைத்து ஜனாதிபதியால் ஒப்படைக்கப்பட்டபடி இராணுவம் அதன் பன்முகத் திறன்களை நிரூபிக்க வல்லது மற்றும் அனைத்து விவசாய பங்குதாரர்களுடனும் நெருக்கமாக ஒத்துழைப்பதன் மூலம் தேசத்தைக் கட்டியெழுப்பும் பணிகளுக்கு உதவுவதற்கான அதன் பயணத்தில் ஈர்க்கக்கூடிய நற்பெயரைப் பெற முடியும் என கூறி அன்றைய நடவடிக்கையின் முக்கியத்துவத்தை மற்றொரு சவாலாக அடிக்கோடிட்டுக் காட்டினார்.

வேளாண் வள மையங்களை நிறுவுதல், நன்னீர் மீன் இனப்பெருக்கம் மேம்படுத்துதல், குளிர் சேமிப்பு வசதிகளை நிறுவுதல் மற்றும் முப்படையினரின் வேளாண் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையம் ஆகியவற்றுக்கு தேசிய அளவில் அரசுத் துறை முயற்சிகளை மூலோபாய ரீதியாக ஒத்துழைத்தல் மற்றும் அரச மற்றும் தனியார் துறை முயற்சிகளில் விவசாயத் துறைகளை மேலும் மேம்படுத்துவதற்கு அதிகபட்ச ஆதரவை வழங்குதல் போன்றவற்றிற்கு புதிய வேளாண்மை மற்றும் கால்நடை படை எதிர்பார்க்கிறது.. இராணுவத்தில் உள்ள வேளாண் மற்றும் கால்நடை பணிப்பகம் அதன் விவசாய மற்றும் பால் நோக்கங்களுக்காக இராணுவ நிலங்களை அதிகபட்சமாக பயன்படுத்தி, நெல், காய்கறிகள், முட்டை மற்றும் பல வகையான அத்தியாவசிய பொருட்களை இராணுவத்தின் கண்டகாடு, மேனிக் பண்ணை, வெள்ளல்குலம், கல்கநத, பலட்டுபன்ன, ஆதியாபுலியான்குளம், பாலல்ல மற்றும் நிராவிய பண்ணைகளில் திட்ங்களை முன்னெடுக்கிறது.தற்போதுள்ள, 'துரு மிதுரு-நவ ரத்தக்' திட்டத்தின் கீழ் வேளாண் மற்றும் கால்நடை பணிப்பகத்தின் படையினர் நெற் செய்கை, 1,000 ஏக்கர் தென்னை , 500 ஏக்கர் டி.ஜே.சி மாம்பழம், 2000 ஏக்கர் முந்திரி, 200 ஏக்கர் மிளகாய், யோக்கட் , தயிர் மற்றும் 100,000 முட்டை கோழிகள், உள்ளூர் மூலப்பொருட்களைப் பயன்படுத்தி உலர் உணவுப் பொதிகள், உப்பு, தக்காளி சோஸ் மற்றும் உரங்கள் மற்றும் 100,000 மஞ்சள் மரக்கன்றுகளை வளர்ப்பது போன்ற முன்னெடுத்துள்ளனர்.

அன்றைய நிகழ்வில் இராணுவ பதவி நிலை பிரதானி தளபதி மேஜர் ஜெனரல் பிரபாத் தேமடன்பிட்டிய, இராணுவ பிரதி பதவி நிலை பிரதானி மேஜர் ஜெனரல் துமிந்த சிரினாக, பணிப்பாளர்கள் , மூத்த அதிகாரிகள் மற்றும் ஏனைய இராணுவ சிப்பாயினர் கலந்து கொண்டனர். latest Nike Sneakers | Air Max