Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

19th November 2022 21:06:48 Hours

தளபதியின் அறிவுறுத்தலின் பேரின் மண்முனை மாணவர்களுக்கு புதிய விளையாட்டு மைதானம்

மட்டக்களப்பு மண்முனை விநாயநகர் வித்தியால மாணவர்களின் தேவையின் பொருட்டு 1.75 ஏக்கர் நிலப்பரப்பில் விளையாட்டு மைதானத்தினை கிழக்கை தளமாகக் கொண்ட இராணுவத்தினரால் நிறைவு செய்யப்பட்டு சம்பிரதாயபூர்வமாக வெள்ளிக்கிழமை (நவம்பர் 11) மாணவர்களிடம் கையளிக்கப்பட்டது.

சில மாதங்களுக்கு முன்னர், அதிபர் திரு. வி. புஷ்பகரனிடமிருந்து இது தொடர்பான கோரிக்கைக் கடிதம், முன்னாள் கிழக்குப் பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் பிரியந்த ஜயவர்தன அவர்களின் ஊடாக இராணுவத் தளபதிக்கு அனுப்பப்பட்டதுடன், அதற்கு இராணுவத் தளபதி சாதகமாக பதிலளித்திருந்ததுடன் அதற்கு பொருத்தமான காணியை கண்டுபிடிப்பதற்காக மாவட்டச் செயலகம்,கல்வித் திணைக்களம் மற்றும் சம்பந்தப்பட்ட கல்வி வலயத்தின் அதிகாரிகளுடன் தொடர்பு கொள்ளுமாறு கிழக்கு பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதிக்கு அறிவுறுத்தப்பட்டது.

460 மாணவர்களின் தேவையான விளையாட்டு மைதானத்தை நிர்மாணிப்பதற்காக 1.75 ஏக்கர் நிலப்பரப்பைப் பெற்றதில் மகிழ்ச்சியடைந்துடன் கனடாவை தளமாகக் கொண்ட ஒரு சர்வதேச அரசு சாரா நிறுவனத்தின் அணுசரனையுடன் (INGO) ரூ. 6.25 மில்லியன் செலவில் மைதானமும் அதற்கு தேவையான ஒரு சிறு அரங்கமும் நிர்மாணிக்கப்பட்டது.

முன்னால் கிழக்கு பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் ருவான் வணிகசூரிய (ஓய்வு), ஓய்வு பெறுவதற்கு முன்னர் மேற்படி சர்வதேச அரசு சாரா நிறுவனத்தில் உள்ள இலங்கை வெளிநாட்டவர்களுடன் ஒருங்கிணைத்து முழுத் திட்டத்திற்கும் அனுசரணையைப் பெறுவதற்கு முக்கியப் பங்காற்றினார். 7 வது கள பொறியியல் படையினர், 3 வது பொறியியல் சேவை படையினரின் ஆதரவுடன் 2022 ஜூலை 9 அன்று பணியை ஆரம்பித்து 5 மாதங்களுக்குள் முழுத் திட்டத்தையும் முடித்து, கல்வி அதிகாரிகள் மற்றும் பாடசாலை சமூகத்தின் நன்மதிப்பை பெற்றனர்.

இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே அவர்கள் கிழக்கு பாதுகாப்பு படையினருக்கு வழங்கிய வழிக்காட்டல் மற்றும் அறிவுறுத்தல்களுடன், 23 வது காலாட்படைபிரிவு தளபதி மேஜர் ஜெனரல் ஷெவந்த் குலதுங்க, 231 வது காலாட்பிரிகேட் தளபதி பிரிகேடியர் திலுப பண்டார, 4 வது கெமுனு ஹேவா படையணியின் கட்டளை அதிகாரி லெப்டினன் கேணல் ஜேஏஎன்பீ குணரத்ன ஆகியோரின் நெருக்கமான மேற்பார்வையின் கீழ் 65 நாட்களுக்குள் இத் திட்டம் 7 வது கள பொறியியல் படையினர் மற்றும் 3 வது கள பொறியியல் சேவை படையினரின் கடின உழைப்புடன் நிறைவடைந்தது.

மாணவர்களிடம் கையளிக்கும் நிகழ்வில் முன்னாள் கிழக்குப் பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் பிரியந்த ஜயவர்தன, மேஜர் ஜெனரல் ருவான் வணிகசூரிய, 23 வது காலாட்படைப்பிரிவின் தளபதி (ஓய்வு), 231 வது காலாட் பிரிகேட் தளபதி, மட்டக்களப்பு வலயக் கல்வி பணிமனையின் உதவி பணிப்பாளர், விநாயகர் வித்தியாலய அதிபர் திரு.வி.புஷ்பகரன், சிரேஷ்ட அதிகாரிகள், பெற்றோர்கள் மற்றும் மாணவர்களும் பங்குபற்றினர்.