Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

23rd October 2021 14:10:16 Hours

தளபதிக்கு பரிசாக கிடைத்த ஒக்சிமீட்டர்கள் பகிர்ந்தளிக்கப்பட்டன

அமெரிக்காவில் உள்ள இலங்கைச் சங்கத்தினால் பாதுகாப்புப் பதவிநிலைப் பிரதானியும் இராணுவத் தளபதியும் கொவிட் 19 பரவலைத் தடுப்பதற்கான தேசிய செயற்பாட்டு மையத்தின் தலைவருமான ஜெனரல் சவேந்திர சில்வாவுக்கு பரிசாக வழங்கப்பட்ட சுவாசம் தொடர்பான மருத்துவ உபகரணங்கள் தொகுதி அம்பாறை மட்டக்களப்பு மற்றும் பொலன்னறுவையில் உள்ள மிகவும் தகுதியான வைத்தியசாலைகளுக்கு கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் சன்ன வீரசூரியவின் மேற்பார்வையில் பகிர்ந்தளிக்கப்பட்டது.

கொவிட் நோயாளிகளின் நலனுக்காக 10 லீட்டர் ஒக்ஸிஜன் செறிவூட்டிகள் அடங்கிய மருத்துவ சாதனங்கள் கல்முனை ஆதார வைத்தியசாலை, மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை மற்றும் பொலன்னறுவை மாவட்ட வைத்தியசாலைக்கு வழங்கப்பட்டது. 231 மற்றும் 241 வது பிரிகேட்களின் தளபதிகளினால் குறித்த உபகரணங்கள் அடையாள ரீதியாக சுகாதார அதிகாரிகளிடம் கையளிக்கப்பட்டன.