Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

29th May 2020 10:45:32 Hours

தனிமைப்படுத்தல் செயல்முறைக்குப் பின் மேலும் 223 பேர் வீடு திரும்பல்

ஐக்கிய இராச்சியத்தின் லண்டனில் இருந்து மேலும் மூன்று நபர்கள் நேற்று இரவு (30) இலங்கை விமானம் யுஎல் 504 மூலம் இலங்கை வந்தனர். அவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தல் செயல்முறைக்காக இராணுவத்தால் நிர்வகிக்கப்படும் ராஜகிரிய ஆயுர்வேத மருத்துவமனை தனிமைப்படுத்தல் மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டனர் என்று இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் சந்தன விக்ரமசிங்க இன்று (31) காலை தெரிவித்தார்.

முப்படையினால் நிர்வகிக்கப்படும் ஐ.டி.யூ.எம்-தியகம (158), விளையாட்டு வளாகம் - தியகம (01), புனானை (18), குண்டசாலை 32 மற்றும் பல்லேகலை (14) தனிமைப்படுத்தல் மையங்களில் தனிமைப்படுத்தல் செயற்பாடுகள் நிறைவடைந்த மொத்தம் 233 பேர் பி.சி.ஆர் சோதனைகளின் பின்னர் இன்று (31) தனிமைப்படுத்தல் சான்றிதழ் வழங்கி தங்கள் வீடுகளுக்கு விடுவிக்கப்படவுள்ளனர். இன்றுவரை (31) முப்படைகளினால் நிர்வகிக்கப்படும் தனிமைப்படுத்தல் மையங்கங்களில் இருந்து மொத்தம் 11,252 தனிமைப்படுத்தப்பட்டு வெளியேறியுள்ளனர்.

தற்போது முப்படையினரால் நடாத்தப்படும் 46 தனிமைப்படுத்தல் மையங்களில் 5,318 பேர் தொடர்ந்தும் தனிமைப்படுத்தலில் உள்ளனர். இன்று 29ம் திகதி வரை மொத்தம் 750 கடற்படை வீரர்கள் கொவிட் 19 வைரஸ் தாக்கத்தில் உள்ளாகி உள்ளனர். கடந்த 24 மணித்தியாலயங்களில் மட்டும் 25 கடற்படை வீரர்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளனர். 388 பேர் முழுமையாக சுகமடைந்து வீடு திரும்பியுள்ளதுடன் மேலும் 362 கடற்படையினர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.latest Nike Sneakers | Nike for Men