Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

03rd May 2020 18:58:37 Hours

தனிமைப்படுத்தப்பட்ட களுத்துரை& கண்டி மாவட்டங்கள் விடுவிப்பு- நொப்கோ தலைவர் தெரிவிப்பு

ராஜகிரியவில் உள்ள கோவிட் -19 எதிர்பாரா பரவலை தடுப்பதற்கான தேசிய செயல்பாட்டு மையத்தில் வழக்கமான ஊடக சந்திப்பு இன்று மதியம் (3) கோவிட் -19 எதிர்பாரா பரவலை தடுப்பதற்கான தேசிய செயல்பாட்டு மையத்தின் தலைவரும், பாதுகாப்பு தலைமை பிரதானியும், இராணுவத் தளபதியுமான லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.

“களுத்துரை மாவட்டத்தில் அமைந்துள்ள பேருவலையிலுள்ள முடக்கப்பட்ட பன்னில பிரதேசம், கண்டி மாவட்டத்திலுள்ள சீனகொட்டுவ மற்றும் அக்குரனை ஆகிய பிரதேசங்கள் இன்று 3 ஆம் திகதி மருத்துவ ஆலோசனையின் பிரகாரம் விடுவிக்கப்பட்டுள்ளன. குறித்த பிரதேசங்கள் ஏனைய பிரதேசங்களை போன்று இயல்பு நிலையில் இயங்கும்.

லன்டனில் இருந்து இன்று மாலை மாணவர்கள் மற்றும் அரச அதிகாரிகள் உட்பட 207 பேர் இலங்கை வரவுள்ளனர். அவர்கள் தனிமைப்படுத்தலுக்காக தனிமைப்படுத்தல் மையங்களுக்கு அனுப்பப்டவுள்ளனர்.

இராணுவத்தினரால் நிருவகிக்கப்பட்டு வரும் தம்மின்ன (9) மற்றும் வெலிகந்தை(2) தனிமைப்படுத்தல் மையங்களில் தனிமைப்படுத்தல் செயற்பாடுகளை நிறைவு செய்த 11 பேர் கொண்ட மேலும் ஒரு குழுவினர், மருத்துவ பரிசோதனைகளின் பின்னர் அவர்களுடைய வீடுகளுக்கு அனுப்பப்பட்டனர். முப்படையினரால் நிர்வகிக்கப்பட்டு வரும் தனிமைப்படுத்தல் மையங்களில் இருந்து 4917 பேர் இன்று 3 ஆம் திகதியுடன் தங்களுடைய வீடுகளுக்கு சென்றுள்ளனர்.

அதேவேளை, கோவிட்-19 தொற்றுக்குள்ளான கடற்படையினரின் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் அவர்களுடன் நெருங்கிய தொடர்புகளை பேணிய 1023 பேர் தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.

முப்படையினரால் நிர்வகிக்கப்பட்டு வரும் 36 தனிமைப்படுத்தல் மையங்களில் இதுவரையில் 4635 பேர் தனிமைப்படுத்தலில் உள்ளனர் என லெப்டின்ன் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்கள் தெரிவித்தார்.

சுருக்கம் :

இதுவரை மொத்தம் தனிமைப்படுத்தப்பட்ட நபர்களின் எண்ணிக்கை -4917

தற்பொழுது மொத்தமாக தனிமைப்படுத்தலில் உள்ளவர்கள்- 4635

மொத்த தனிமைப்படுத்தல் நிலையங்கள் – 36

முழுமையான காணொளி பின்வருமாறு bridge media | Nike Shoes, Sneakers & Accessories