Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

16th November 2019 18:49:07 Hours

ஜனாதிபதியின் உதவியுடன் பௌத்த தேரர்களுக்கான வதிவிட வீட்டு தொகுதிகள் வழங்கி வைப்பு

மேன்மை தங்கிய ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்களினால் இம் மாதம் (15) ஆம் திகதி ஜனாதிபதியின் நிதி திட்டத்தின் கீழ் களுவரகஸ்வெவ ‘சாசன’ சர்வதேச தேராவட பௌத்த மத்திய நிலையத்தில் தேரர்களுக்கான புதிய வதிவிட வசதி கட்டிட தொகுதிகள் வழங்கி வைக்கும் நிகழ்வானது மஹாசங்க தேரர்களின் தலைமையில் பாதுகாப்பு பிரதம அதிகாரி மற்றும் முப்படை தளபதிகளின் பங்களிப்புடன் இடம்பெற்றது.

நன்கொடையாளியான வன்னிநாயக்க அவர்களினால் 89 ஏக்கர் நிலப்பரப்பு இந்த மத்திய நிலையம் அமைப்பதற்காக நன்கொடையாக வழங்கி வைக்கப்பட்டது. இந்த மத்திய நிலையத்தில் பௌத்த பிரதான சம்பிரதாய அனுகூலத்தை வளர்ச்சியடைய செய்யும் நோக்குடன் திறந்து வைக்கப்பட்டதாகவும். இந்த பௌத்த மத்திய நிலையமானது பௌத்த துறவிமார்களான நாயுன்ன ஆரியதம்ப மஹா நாயக்க தேரர், கள்டுவஜோகேஸ்ராமய போன்ற பௌத்த மதத் தேரர்களின் பூரன எண்ணக்கருவிற்கமைய இந்த நிலையமானது திறந்து வைக்கப்பட்டன.

இந்த நிகழ்வில் பாதுகாப்பு பிரதம அதிகாரி அத்மிரால் ரவீந்திர சி விஜயகுணரத்ன, இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா, கடற்படைத் தளபதி வயிஷ் அத்மிரால் பியல் டி சில்வா, முன்னாள் இராணுவ தளபதி (ஓய்வு) ஜெனரல் தயா ரத்னாயக கலாநிதி ரங்க கலன்சூரிய, தயாக சபையின் தலைவர் ஜனாதிபதி சிறிசேன அவர்கள் இணைந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.

மேலும் ஜனாதிபதி அவர்களினால் இந்த நிகழ்வில் மரநடுகைகள் நாட்டப்பட்டு மஹா சங்க தேரர்களின் பௌத்த சமய ஆசிர்வாத வழிபாடுகளும் இடம்பெற்றன. 2 ஆவது பொறியியல் சேவைப் படையணியின் கட்டளை அதிகாரி கேர்ணல் H.T. P மகேந்திர மற்றும் பொறியியல் திட்ட பணிப்பாளர் மேஜர் திலங்க லங்காதிலக அவர்களது பூரன தலைமையில் இடம்பெற்றது. இந்த கட்டிட நிர்மான பணிகள் கடந்த ஒக்டோபர் மாதம் 03 ஆம் திகதி நிறைவடைந்தது.

இந்த கட்டிட நிதி திட்டத்திற்காக 17 மில்லியன் ரூபாய் செலவாகி உள்ளதுடன் இந்த பௌத்த மத்திய நிலையமானது பௌத்த சமய வளர்ச்சியை மேம்படுத்தும் நோக்கத்துடன் திறந்து வைக்கப்பட்டது. best Running shoes brand | SUPREME , Fullress , スニーカー発売日 抽選情報 ニュースを掲載!ナイキ ジョーダン ダンク シュプリーム SUPREME 等のファッション情報を配信! - パート 5