Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

23rd September 2019 13:21:52 Hours

செவனகலையில் இடம்பெற்ற ‘வலவ சுபர்குரோஷ்’ போட்டிகள்

இலங்கை இராணுவ மோட்டார் விளையாட்டு சங்கமான இலங்கை இராணுவ மின்சார பொறியியல் படையணியினால் ஒழுங்கு செய்யப்பட்ட உடவலவ சுபர்குரோஷ் 2019 ஆம் ஆண்டிற்கான போட்டிகள் உடவலவையிலுள்ள செவனகல தேசிய பூங்கா பூமியினுள் இம் மாதம் (22) ஆம் திகதி இடம்பெற்றது.

இந்த நிகழ்விற்கு பிரதம அதிதியாக வருகை தந்த இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்களை இராணுவ மோட்டார் விளையாட்டு சங்கத்தின் தலைவர் மேஜர் ஜெனரல் வசந்த மாதொல அவர்கள் வரவேற்றார். பின்பு இராணுவ தளபதியவர்கள் கொடிகளை காட்டி போட்டிகளை ஆரம்பித்து வைத்தார்.

இப் போட்டியானது 2011 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. அதன் போது பார்வையாளர்களுக்கு சிறந்த பொழுது போக்கை கொண்டிருந்த விடயமாக இந்த போட்டி அமைந்திருந்தது.

இம்முறை போட்டிகளில் வாகன ஓட்டுனர் மற்றும் மோட்டார் சைக்கிள் ஓட்டுனர்களை உள்ளடக்கிய 250 அங்கத்தவர்கள் கலந்து கொண்டதுடன் பல்வேறுபட்ட வாகனங்கள் உள்ளடக்கப்பட்டிருந்தன. இந்த போட்டியின் மூலம் கிடைக்கும் நிதிகள் படையணியைச் சேர்ந்த விஷேட தேவையுள்ள படையினர்களின் நலன்புரி திட்டங்களுக்காக பயண்படுத்தப்படும் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.

இந்த போட்டிகள் மோட்டார் விளையாட்டு சங்கத்தின் தலைவர் மேஜர் ஜெனரல் வசந்த மாதொல அவர்களது பூரன தலைமையில் இடம்பெற்றன.

இந்த போட்டிகளில் எட்டு மோட்டார் சைக்கிள்கள், 16 மோட்டார் கார்கள், சிறுவர்களுக்கான மோட்டார் சைக்கிள்களான்

125cc (2T&4T), to 125cc 2T & 250cc 4T (Twin Races 125cc 2T r 100cc up to 125cc (2T), 100cc up to 125cc 2T 175cc 250cc 4T இனங்களைச் சேர்ந்த மோட்டார் சைக்கிள்கள் மற்றும் கார்கள் பயண்படுத்தப்பட்டன.

இந்த போட்டிகளில் சிறந்த மோட்டார் சம்பியனாக ஆனந்த வீரசிங்க அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவருக்கு வெற்றிக்கேடயம் மற்றும் நிதி காசோலைகள் பரிசாக வழங்கி வைக்கப்பட்டன. jordan Sneakers | 【11月発売予定】シュプリーム × ナイキ エアフォース1 全3色 - スニーカーウォーズ