Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

17th January 2020 18:36:59 Hours

சுயாதீன தொலைக்காட்சி மற்றும் படையினரது ஒத்துழைப்புடன் வீடுகள் நிர்மானிப்பு

வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் பூரன ஏற்பாட்டில் இம் மாதம் 18 ஆம் திகதி சமூக நலன்புரி திட்டத்தின் கீழ் நிர்மானிக்கப்பட்ட பின் தங்கிய குடும்பத்தைச் சேர்ந்த நபரானவருக்கு 14 ஆவது வீடு கையளிக்கப்பட்டன.

வன்னி பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் ரோஹித தர்மசிறி அவர்களது வழிக்காட்டலின் கீழ் மூன்று பிள்ளைகளின் தகப்பனான திரு சிறில் செனெவிரத்ன அவர்கள் சமதிகம சீப்புகுளம கஹடகஷ்ஹேடிய பிரதேசத்தில் வசித்து வருகின்றார். இவருக்கே புதிதாக நிர்மானிக்கப்பட்ட 14 ஆவது வீடு கையளிக்கப்பட்டன.

இந்த வீடு சுயாதீன தொலைக்காட்சியின் பூரன அனுசரனையில் வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் சிவில் தொடர்பாடல் அதிகாரி லெப்டினன்ட் கேர்ணல் G.A.L கித்சிறி அவர்களது கண்காணிப்பின் கீழ் இந்த நிர்மான பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

சமூக நலன்புரி திட்டத்தின் கீழ் 21 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் குமார் ஜயம்பதி அவர்களது எண்ணக் கருவிற்கமைய 212 ஆவது படைத் தலைமையகத்தின் கட்டளை தளபதி கேர்ணல் அனில் பீரிஸ் அவர்களது பூரன தலைமையில் இந்த வீடுகள் நிர்மானிக்கப்பட்டுள்ளன.

புதிதாக நிர்மானிக்கப்பட்ட இந்த வீட்டில் வாழ்க்கை அறை, சாப்பாட்டு அறை, படுக்கையறைகள் போன்ற அனைத்து வசதிகளையும் உள்ளடக்கி நிர்மானிக்கப்பட்டுள்ளது. அத்துடன் ரூ .1 லட்சத்திற்கும் அதிகமான மதிப்புள்ள அத்தியாவசிய வீட்டு உபயோகப் பொருட்கள், மின்சார உபகரணங்கள் மற்றும் தளபாடங்களை இந்த பயனாளிகளுக்கு பரிசாக வழங்கி வைக்கப்பட்டன.

இந்த புதிய வீட்டு திறப்பு விழாவிற்கு பிரதம அதிதியாக வன்னி பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் ரோஹித தர்மசிறி அவர்கள் வருகை தந்து சமய அனுஷ்டான ஆசிர்வாதங்களின் பின்பு திறந்து வைத்தார்.

இந்த நிகழ்வில் சுயாதீன தொலைக்காட்சி வலையமைப்பு மற்றும் திரைப்பட இயக்குனர் திரு சுதத் ரோஹன, இராணுவ சிரேஷ்ட அதிகாரிகள் ,கிராம வாசிகள் கலந்து கொண்டனர். Nike footwear | GOLF NIKE SHOES